கிழக்குமாகாண சபையை அவசரமாக கூட்டுமாறு கூறிய SLMC உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.

(எம்.பைஷல் இஸ்மாயில்)
கிழக்கு மாகாண சபையினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்து கிழக்கு மாகாண அமைச்சரவைக் கூட்டத்தை அவசரமாக கூட்டுமாறு கோரிக்கை விடுத்த முஸ்லிம் காங்கிரஸ் மாகாண அமைச்சர்கள் இருவரும் குறித்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 22.05.2013 ஆம் திகதி நடைபெற இருந்த குறித்த அமைச்சரவைக் கூட்டத்தை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஐ.எம்.எம்.மன்சூர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகிய இருவரும் இணைந்து கிழக்கு மாகாண அமைச்சரவை கூட்டத்தை அவசரமாக கூட்டுமாறு மாகாண முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதன் பிரகாரம் கடந்த 13.05.2013 ஆம் திகதி அவரச அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சரால் கூட்டப்பட்டது. இதில் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோருடன் பிரதம செயலாளர் டீ.எம்.சரத் அபய குணவர்தன, பிரதிப் பிரதம செயலாளர் எஸ்.குமரகுரு ஆகியோரும் சமூகமளித்திது பல மணி நேரம் மற்றய மூன்று அமைச்சர்களின் வருகையை எதிர்பார்த்திருந்தனர்.

குறிப்பிட்ட மூன்று அமைச்சர்களும் வராத இந்நிலையில் இந்த அமைச்சரவைக் கூட்டத்தை நடாத்துவதாயின் முதலமைச்சர் உட்பட இன்னும் இரு அமைச்சர்கள் சமூகம் கொடுத்தால் மாத்திரமே அமைச்சரவைக் கூட்டத்தை நடாத்த முடியும் என்றும் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தை எதிர்வரும் 29.05.2012 ஆம் திகதி பி.ப 5.00 மணிக்கு நடாத்துவதாக தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண அமைச்சரவையின் அவசர கூட்டத்தை கூட்டி பல நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ்  அண்மையில் ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :