IPL கிரிக்கெட் மேலும் ஒரு சூதாட்டம் திடுக்கிடும் தகவல் வெளியானது.


ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் உள்ளிட்டோரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீஸ் காவலில் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அஜித் சண்டிலாதான் ஸ்பாட் பிக்சிங்கில் தீவிரமாக செயல்பட்டுள்ளார். இவருக்கு நாடு முழுவதும் சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு இருக்கிறது. அடிக்கடி அவர்களுடன் பேசி இருக்கிறார். சூதாட்ட தரகர்கள் சண்டிலா மூலம் தான் அவருக்கு நெருக்கமான மற்ற அணி வீரர்களை இழுத்து இருக்கிறார்கள். சண்டிலா மூலம் மேலும் ஒரு ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம் நடந்து இருப்பது தெரியவந்துள்ளது.

மே 12-ந்தேதி இந்தப்போட்டி ராஞ்சியில் நடந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி தொடர்பான வீடியோ காட்சிகளை போட்டுப் பார்த்து விசாரணை நடத்த டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்தப்போட்டிக்காக சூதாட்ட தரகர்கள் சண்டிலாவிடம் தொடர்பு கொண்டு ரூ.30 லட்சம் பேரம் பேசி இருக்கிறார்கள். அட்வான்சாக சண்டிலா ரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டார் என்றும் தெரியவந்துள்ளது.

சண்டிலா டெல்லி நேரு நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு அடிக்கடி செல்வார். கடந்த 8 மாதமாக அங்கு அவர் சென்று தங்கி இருக்கிறார். அப்போது அந்த ஓட்டல் பாதுகாப்பு மேனேஜர் புபேந்தர் நாகருடன் பழக்கம் ஏற்பட்டது. புபேந்தர் நாகர் கிரிக்கெட் தரகர் விக்கிக்கு நெருக்கமானவர். விக்கி டெல்லியில் உள்ள ஒரு இரவு விடுதியில் பணி புரிந்து வந்தார். விக்கி தனது நண்பர் புபேந்தர் நாகர் மூலம் கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு பல முறை அவர்களை சந்தித்து பேசியுள்ளார்.

மே முதல் வாரத்தில் சண்டிலாவை பெங்களூர், தெற்கு டெல்லி உள்பட பல இடங்களில் கிரிக்கெட் தரகர்கள் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது ராஞ்சியில் மே 12-ந்தேதி நடந்த கொல்கத்தா- பெங்களூர் அணிகள் மோதிய போட்டிக்கான சூதாட்டம் முடிவாகி உள்ளது. சண்டிலா கிரிக்கெட் தரகர்களிடம் கொல்கத்தா அணி வெற்றி பெறும் என்று உறுதி அளித்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவர் சொன்னப்படி கொல்கத்தா ஜெயித்தாலும் கடைசி ஓவரில் தான் திருப்பம் ஏற்பட்டு அந்த அணியால் வெற்றி பெற முடிந்தது.

முதலில் விளையாடிய பெங்களூர் அணி 115 ரன்களில் சுருண்டது. கொல்கத்தா அணி குறைந்த ரன்னில் வெற்றி பெற்றதால் சூதாட்ட தரகர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக கூறி அவர்கள் சண்டிலாவுக்கு சொன்னபடி பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். மேற்கண்ட விவரங்கள் தரகர்கள் மற்றும் சண்டிலா விடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விக்கி, புபேந்தர்நாகர், சண்டிலா இடையேயான சந்திப்பு பல முறை நடந்துள்ளது. இதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளது.

விக்கி மூலம் சண்டிலாவுக்கு ரூ.5 லட்சம் வழங்கியதற்கான ஆதாரமும் பொ லீசில் சிக்கியுள்ளது. இதற்கிடையே ஸ்ரீசாந்த் மும்பை ஓட்டலில் கைது செய்யப்பட்டதும் அவர் தங்கி இருந்த அறையில் தடயங்கள் அழிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரீசாந்தின் நண்பர் அபிஷேக் சுக்லாவிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :