ஹிந்தியில் படமாகப்போகும் இசையமைப்பாளர் ரஹ்மானின் கதை.

சையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் எழுதிய இரண்டு கதைகள் ஹிந்தியில் படமாகப் போவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரோஜா படத்தில் மணிரத்னத்தினால் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டவர் ஏ.ஆர்.ரகுமான். அப்படத்தின் வெற்றி காரணமாக, தமிழில் தொடர்ந்து பெரிய அளவில் வெற்றிப் பாடல்களைக் கொடுத்து முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம்பிடித்தார்.

அதையடுத்து, ஹாலிவுட்டுக்கும் சென்று ஆஸ்கார் விருது பெற்று இப்போது புகழின் உச்சாணியில் அமர்ந்திருக்கிறார்.

மேலும், பல ஆண்டுகளாக அமெரிக்காவில் தங்கியிருந்த ரகுமான், அந்த சமயங்களில் படங்களுக்கு திரைக்கதை எழுதுவது பற்றியும் படித்துள்ளாராம்.

அதை முடித்த கையோடு அங்கிருந்தபோது இரண்டு கதைகளை தயார் பண்ணி விட்டாராம். ஆனால் அவர் சென்னை வந்தபிறகு இந்த கதை எழுதிய விவரம் பற்றியும் சொன்னார்.

இப்போது அந்த கதைகளை ஹிந்தி இயக்குனர் ஒருவரிடம் ரகுமான் கூறியிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. விரைவில் தொடங்கவிருக்கும் அந்த இரண்டு படங்களுக்குமே ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்கிறாராம்.

அதோடு, படம் ஹிந்தியில் தயாரானபோதும், தமிழிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட உள்ளதாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :