ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியாமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் புத்தளத்தில் வாழும் வடமாகாண முஸ்லிம்கள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர் . இந்த கலந்துரையாடல்இன்று புத்தளம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் அரசாங்க அதிபர் பெர்ணான்டோவுடன் இடம்பெற்றது .
இச்சந்திப்பில் வடமாகாண முஸ்லிம்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக வடமாகான தேர்தல் இடம்பெறப் போகும் நிலையில் அது தொடர்பாக ஆவணங்களை வடமாகாண முஸ்லிம்கள் இலகுவாக பெற்றுகொள்வதை உறுதிப் படுத்தும் முகமாக இந்த சந்திப்பு இடம்பெற்றது .
2009 மே மாதம் இறுதிக்கு முன்னர் இடம்பெயர்ந்து தற்போது வெளிமாவட்டங்களில் வதியும் முஸ்லிம் மக்கள் தமது வாக்காளர் பதிவினை தங்கள் விரும்பும் மாவட்டத்தில் பதிவது தொடர்பாகவும் அக்கூட்டத்தில் பேசப்பட்டது.
இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலீப் பாவா பாறூக், கட்சி முக்கியஸ்தர்களும் புத்தளம் மேலதிக அரசாங்க அதிபர் சந்திரசிறி பண்டார, புத்தளம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுர அபேயவிக்கிரம, புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம் மலீக் மற்றும் சமூக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment