தீக்குளித்த தேரரின் கோரிக்கையாகக்கூறி பொதுபல சேனா கூறும் புதிய சட்டங்கள்.

















சிங்கள பாடசாலைக்கு முஸ்லிம்கள் பர்தா அணிந்து செல்வதை தடை செய்ய வேண்டும், முஸ்லிம்கள் கருப்பு ஹபாயா உடைகள் அணிந்து காரியாலயங்களுக்கு செல்வதையும், தொழில்களில் ஈடுபடுவதையும் தடை செய்ய வேண்டும் இவைகளுக்கு அரசியல்வாதிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நேற்று பதுளையில் பொது பல சேனா ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

அவ்வார்ப்பாட்டத்தில் மேலும் அவர்கள் தெரிவித்ததாவது, இறைச்சி அறுக்கும் நிலையங்களை மூடவேண்டும், மத மாற்றத்தை உடன் நிறுத்த வேண்டும், சிங்கள பௌத்தர்களின் நாடான இலங்கையில் மதமாற்றம், மிருக பலி போன்றன களைந்து எறிய வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

தீக்குளித்த போவத்தே இந்திரரத்ன ஹிமியின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி பொது பல சேனா பதுளை கிளை பதுளையில் எதிர்ப்பு ஊர்வலமொன்று நேற்று பி.ப. 2.00 மணிக்கு பதுளையில் நடாத்தியது.

சுமார் 500 க்கும் குறைவானவர்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு ஊர்வலம் பதுளை முத்தியங்கனை ரஜ மாவிகாரையிலிருந்து ஆரம்பமாகி பதுளை லோவர் வீதி, பஸார் வீதியூடாக பதுளை மாநகர சபைக்கு வந்தது. அங்கு பதுளை மாநகர முதல்வர் உபாலி நிஸ்ஸங்க குணசேகரவிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர். அதன்போது பொது பல சோன இயக்கத்தினர் நகர எல்லைக்குள் இறைச்சி கடைகளை தடை செய்ய வேண்டிய சட்ட மூலத்தை உடன் அமுல் நடத்தும் படி கேட்டுக் கொண்டனர்.

அதனையடுத்து ஊவா மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று பொது பல சேனா இயக்கத்தினர் ஆளுனர் சீ. நந்தமெதிவிடம் கையளித்தனர். அதனையடுத்து ஊவா மாகாண சபைக்கு சென்ற பொது பல சேனா இயக்கத்தினர் முதலமைச்சரிடம் கையளிக்க வேண்டி செயலாளரிடம் ஒப்படைத்தனர்.

இதன் போது பதுளை நகரில் கடைகள் மூடப்பட்டுள்ளது. பொலிஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். MP







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :