
இலங்கைக்கும் அதன் அயல் நாடுகளுக்கும் தொலைத்தொடர்பு மற்றும் ஒலி - ஒளிபரப்புச் சேவைகளை வழங்கும் முதலாவது தொடர்பாடல் செய்மதியை இலங்கைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் சீனாவில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
உலக சந்தையில் வர்த்தக செய்மதிகளை ஏவுவதற்கான சேவையை வழங்க அதிகாரம் அளிக்கப்பட்ட ஒரேயொரு நிறுவனமாக கிரேட் வோல் கைத்தொழில் கூட்டுத்தாபனம் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் முன்னிலையில் நேற்று (28) இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதுவரையில் 18 நாடுகளுக்கு 43 செய்மதிகளை ஏவிக்கொடுத்துள்ளதாக இந்த சீன கம்பனி கூறியுள்ளது.
2015ஆம் ஆண்டளவில் உலக செய்மதி சந்தையில் 10 சதவீதத்தை பிடிக்க சீனா எண்ணியுள்ளதாக இந்தக் கம்பனி கூறியுள்ளது.
0 comments :
Post a Comment