முஸ்லிம் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் முதல் முறையாக திருமணம்..!


றிபாய்தீன் ஜமால்தீன்
பா
கிஸ்தானை சேர்ந்த பெண் ஓரினச்சேர்க்கையாளர் ஜோடி ஒன்று, கடும் எதிர்ப்புகளை மீறி இங்கிலாந்தில் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.

இதன்படி முதல் முஸ்லிம் ஓரினச்சேர்க்கை ஜோடியாக இவர்கள் கருதப்படுகின்றனர்.

பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ரெஹனா கவுசார் (34) மற்றும் சோபியா கமர் (29). இவர்கள் இருவரும் இங்கிலாந்தில் உள்ள பரிமிங்கம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்துக்கொண்ட இவர்கள், ஒன்றாக வாழ முடிவு செய்து, தெற்கு யார்க்ஷைர் பகுதியில் உள்ள வீட்டில், ஒரு வருட காலமாக தங்கிவந்துள்ளனர்.

ஓரினச்சேர்க்கையாளர்களான இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தப்போது, இவர்களுக்கு இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானிலிருந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

பாகிஸ்தானில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் செய்துகொள்ள சட்ட ரீதியாக அனுமதியில்லை. மேலும் இவ்வகையிலான உறவு குற்றமாகவும் கருதப்படுகிறது.

இதனையடுத்து, இம்மாதத்தின் முதல் வாரத்தில் இங்கிலாந்தில் அவர்கள் பதிவு திருமணம் செய்துக்கொண்டனர்.

திருமண சான்றிதழை இங்கிலாந்து குடியுரிமை அதிகாரிகளிடம் சமர்ப்பித்த ரெஹனா - சோபியா ஜோடி தங்களுக்கு இங்கிலாந்தில் வசிக்கும் நிரந்தர குடியுரிமை வழங்க வேண்டும் என்று கேட்டு மனு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :