பிலிப்பைன்ஸில் எரிமலை இன்று திடீரென வெடித்தது.


பிலிப்பைன்ஸில் பல எரிமலைகள் உள்ளன. இவற்றில் ஒன்றான மயோன் எரிமலை அலபய் மாகாணத்தில் உள்ளது.

தலைநகர் மணிலாவில் இருந்து 330 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த எரிமலை இன்று திடீரென வெடித்து புகையையும் சாம்பலையும் வெளியேற்றியது.

அப்போது 500மீட்டர் உயரம் வரை அடர்த்தியான சாம்பல் வெளியேறியதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

அந்த நேரத்தில் எரிமலையை சுற்றிப்பா
ர்க்க சென்ற3 சுற்றுலா பயணிகள் இறந்துவிட்டதாகவும், மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எரிமலை வெடித்த நேரத்தில் அவர்கள் அந்த மலைச் சரிவில் நின்றதாக கூறப்படுகிறது. மீட்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர். அங்கு சென்றவர்கள் குறித்து தகவல் சேகரிக்கும் பணியை அந்தநாட்டு அரசு தொடங்கியுள்ளது.

மயோன் எரிமலை சரியான கூம்பு வடிவ தோற்றத்தை கொண்டுள்ளதால் அந்த எரிமலையை காண சுற்றுலாப் பயணிகள் பெரும் அளவில் வருகிறார்கள்.

மிக ஆக்ரோசமான இந்த எரிமலை இது வரை 48 முறை வெடித்து சிதறியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

அந்தநாட்டின் மூத்த புவியியலாளர் இது நீராவியால் ஏற்பட்ட சிரிய வெடிப்பு மட்டுமே,இதனால் மக்கள் வெளியேற தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :