1973க்குப் பின் எலிசபெத் இல்லாத முதல் பொதுநலவாய மாநாடு.


லங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய மகாராணி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1973ம் ஆண்டுக்குப் பின்னர் பிரித்தானிய மகாராணி முதல் தடவை பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்காமல் இருக்கப் போகிறார் என ஸ்கை செய்திச் சேவை தெரிவித்துள்ளன.

மகாராணிக்கு பதிலாக பிரித்தானிய அரசர் சால்ஸ் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் மகாராணி கலந்து கொள்ளாமைக்கு தெளிவான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எனினும் மகாராணி தனது அதிகாரங்களை மகனுக்கு விட்டுக் கொடுக்கும் திட்டமாக இது இருக்கலாம் என விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மோசமாக இருப்பதால் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டை வெளிநாடுகள் புறக்கணிக்க வேண்டும் எனவும் மகாராணி இதில் பங்கேற்க கூடாது எனவும் தொடர்ச்சியாக அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் பிரித்தானிய மகாராணியின் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :