இலங்கை ஊடக கூட்டுறவு சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளராக-ஜவ்பர்கான்

(எம்.பைஷல் இஸ்மாயில்)

லங்கை ஊடக கூட்டுறவு சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளராகவும் தேசிய சபை உறுப்பினராகவும் சிரேஸ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள சிங்கள தமிழ் முஸ்லிப் ஊடகவியலாளர்களை இணைத்து இச்சங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. காஞ்சன குமார தலைவராகவும் றோஹண சிரிவர்த்தன பொதுச்செயலாளராகவும் ஜூனூர் முஹம்மட் பொருளாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகம் மற்றும் இஸ்லாமியத்தமிழ் இலக்கியத்துறைகளில் முழுமையான ஈடுபாடு கொண்டுள்ள ரீ.எல்.ஜவ்பர்கான் கவிதைத்துறைக்காக இலங்கை அரசின் தேசிய சாஹித்ய மண்டல விருதைப்பெற்ற முதல் முஸ்லிம் கவிஞராவார். 5 நூல்களை எழுதியுள்ள இவர் பல உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களில் முழுநேர ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

இலக்கியம் ஊடகம் அரசியல் சமுகப்பணி என பலதுறைகளில் தன்னை இணைத்துக்கொண்டு பணிபுரியும் ஜவ்பர்கான் இதுவரை 3000 இக்கும் மேற்பட்ட மரபு மற்றும் புதுக் கவிதைகளையும் பல சிறுகதைகள் நாடகங்கள் மற்றும் ஆய்வு அரசியல் கட்டுரைகளையும் எழுதயுள்ளார். அத்துடன் தேசிய, சர்வதேச ரீதியில் 21 விருதுகளைப் பெற்று சாஹித்யசூரி, கவிச்சுடர், கவித்தாரகை, கவிமுரசு, சாதனைச்சிகரம், ஊடகச்சுடர், இலக்கியவேந்தர், கவிதாநதி உட்பட பல பட்டங்களையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :