(எம்.பைஷல் இஸ்மாயில்)
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோறக்கோவில் பகுதியில் கட்டுப்பணம் செலுத்தி காட்ஸ் விளையாட்டில் ஈடுபட்டு வந்த 14 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் 14 நபர்களை கைது செய்துள்ளதுடன் அவ்விடத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபா பணத்தினையும் மீட்டெடுத்துள்ளனர்.
மேற்படி பகுதியில் கடந்த பல நாட்களாக இவர்கள் காட்ஸ் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இது குறித்து உடனடியாக செயற்பட்ட பொலிஸார் இவர்களை கைது செய்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தியமைக்கிணங்க தலா 1000 ரூபா தண்டப்பணத்தில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இவர்கள் தொடர்பில் பொலிஸார் தொடர்ச்சியான கண்காணிப்பிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

0 comments :
Post a Comment