ஆரிப் சம்சுதீனின் முயற்சியினால் கல்முனை கடற்கரைப்பள்ளி வீதி புனரமைப்பு.

(எஸ்.அஷ்ரப்கான்)

மிக நீண்டகாலமாக கவனிப்பாரற்றுக்கிடந்த கல்முனை கடற்கரைப்பள்ளி வீதி 39 மில்லியன் ரூபா செலவில் கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்டு வருகிறது. அதன்

ஆரம்பகட்டமாக வீதியின் இரு ஓரங்களிலும் வடிகான் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. நூற்றக்கணக்கான பிரதேச வாசிகள் கல்முனை மாநகரத்திற்கு கடற்கரைப்

பிரதேசத்திலிருந்து செல்லும் பிரதான பாதையாக இப்பாதையை நாளாந்தம் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் வரலாற்றுச்சிறப்பு மிக்க கல்முனை கொடியேற்ற கடற்கரைப்பள்ளி அமைந்துள்ள

இப்பாதையை புனரமைக்க நடவடிக்கை எடுத்தமைக்காக பிரதேசவாசிகள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனுக்கு நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றனர்.

சுமார் 30 வருடகாலமாக திருத்தப்படாமல் இருந்த இந்த கடற்கரை வீதிக்கான
வீதிப்புனரமைப்பு வேலைகளை அண்மையில் அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை

ஆரம்பித்துவைத்ததுடன், பிரதேச அரசியல்வாதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :