கிரிக்கெட் சூதாட்டத்தில் இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது!

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக இந்தி நடிகர் விந்து தாராசிங் மும்பையில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.

கிரிக்கெட் சூதாட்டம் இந்தியா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் பொலிஸார் நடத்திய வேட்டையில் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்கள் மற்றும் 19 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்திலும் 9 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த பிரசாந்த்தை பொலிஸார் தேடி வந்தனர். அவரும், நேற்று மதியம் சி.ஐ.டி. பொலிஸாரின் தலைமை அலுவலகத்தில் சரணடைந்தார். அவரின் வீடுகளும் சோதனையிடப்பட்டன.

இந்நிலையில், கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக இந்தி நடிகர் விந்து தாரா சிங்கை பொலிஸார் மும்பையில் வைத்து கைது செய்தனர். விந்து தாராசிங் இந்தி நடிகர் தாராசிங்கின் மகனாவார். கிரிக்கெட் சூதாட்டத்தில் முதன் முதலாக கைதான நடிகர் விந்து தாராசிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :