கேபி, பிள்ளையான், கருணா,ஜோர்ஜ் மாஷ்டர் இவர்களை ஏன் கைது செய்ய வில்லை-அப்துஸ் ஸலாம்


( எஸ்.அஷ்ரப்கான் )
ஸாத் ஸாலியின் கைதின் மூலம் இலங்கையில் ஜனநாயகத்திற்கு சாவுமணி
அடிக்கப்பட்டு வருவது உண்மையாகிறது என ஐக்கிய தேசியக்கட்சியின் அம்பாரை
மாவட்ட முஸ்லிம் பிரதேச பிரச்சாரச் செயலாளர் எஸ். அப்துஸ் ஸலாம்
தெரிவித்தார்.

அஸாத் ஸாலியின் கைது தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் மேலும்
கருத்து தெரிவிக்கையில்,

தமிழ், முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள்
பிரதிமேயருமான அஸாத் சாலி இந்தியா நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியின்
அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக
அறிவித்துள்ளது.

அப்படியானால் கேபி, பிள்ளையான், ஜோர்ஜ் மாஷ்டர் போன்றவர்களை எந்த
பொலிசார் கைது செய்து எங்கு விசாரைணை செய்யப்பட்டது. எனக்கேட்க
விரும்புகின்றோம். அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்ற இந்த பயங்கரவாதிகள்
வெளியிலே சுதந்திரமாக அரச பாதுகாப்பு, பதவி, குளிரூட்டப்பட்ட
வாகனங்கிளில் பவனி வரும்போது, சமூக நோக்கோடு ஆசாத் சாலி கொடுத்த வெறும்
பேட்டி ஒன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றால் இது வெறும்
அரசியல் பழிவாங்கல் என்பது அப்பட்டமாக தெரிகிறது.

அவ்வாறு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்றால்
பயங்கரவாதிகளாக இருந்தவர்களை ஏன் இந்த அரசாங்கம் கைது செய்து சட்டத்தின்
முன் நிறுத்தவில்லை. என்று மக்கள் இன்று கேட்கின்ற அளவுக்கு
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மிக மோசமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

ஆகவே, ஜனநாயக அடிப்படையில் தமது சமூகத்திற்காக பேசினார் என்பதற்காக கைது
செய்யப்பட்டுள்ள அஸாத் சாலி அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்
என்று முஸ்லிம்களின் ஏக பிரதிநிகள் என தங்களை அடையாளப்படுத்துகின்ற ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையும் வேண்டியிருக்கின்றது. வெறுமனே
ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதை கைவிட்டு ஜனாதிபதியிடம் நேரடியாக பேச
வேண்டும். என வேண்டுகின்றோம்.

அஸாத் சாலி அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தலைசாய்த்து, அரசின்
முந்தானைக்குள் ஒழிந்து கொண்டிருந்தால் சுகபோக நிலையில் சந்தோசமாக
வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் தற்போது சமூகத்திற்காக குரல்
கொடுத்தமையினால் சிறைவாசம் அனுபவிக்கிறார். இந்நிலை உணர்ந்து எமது
அரசியல் தலைமைகள் ஒன்றித்து அவரின் விடுதலைக்காக முயற்சி எடுக்க முன்வர
வேண்டும் என்றும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :