இந்திய காதலனை கொலைச்செய்த இலங்கையைச்சேர்ந்த திருமணமான பெண்.

ந்தியரான தனது காதலனை கொலைச்செய்ததாக கூறப்படும் இலங்கையைச்சேர்ந்த திருமணமான வீட்டுப்பணிப்பெண்ணுக்கு சிங்கபூர் நீதிமன்றத்தினால் 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2009 ஆண்டு அவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையின் போதே தனது காதலனை பணிப்பெண் கொலைச்செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜோடி தமது காதல் விவகாரத்தை 2007 ஆம் ஆண்டில் தொடங்கியுள்ளனர் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்திய பிரஜையான முருகையன் 1998 ஆம் ஆண்டிலிருந்து சிங்கபூரில் வேலைச்செய்து வருகின்றார். இலங்கையைச்சேர்ந்த பணிப்பெண்ணான புவனேஸ்வரி தர்மலிங்கம் 2004 ஆம் ஆண்டு சிங்கபூருக்கு சென்றுள்ளார்.

இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததுடன் 2009 ஆம் ஆண்டளவில் சண்டை ஏற்பட்டள்ளது. 34 வயதான புவனேஸ்வரி தர்மலிங்கம் 32 வயதாக முருகையன் செல்வத்தின் தலையில் பாரம்தூக்கும் பயிற்சியிக்கு பயன்படுத்தப்படும் சுமார் 6.5 கிலோகிராம் நிறைகொண்ட கருவியால் தலையில் அடித்துள்ளார்.

இதனால் தனது காதலனான முருகையன் செல்வம் இறந்துள்ளார். முருகையன் மீது தான் தாக்குதல் நடத்தியதை புவனேஸ்வரி ஒப்புக்கொண்டுள்ளார்.

தனக்கு இந்தியாவில் நடைபெறவிருந்த திருமணத்திற்கு பணம் எடுப்பதற்காக புவனேஸ்வரியின் காசோலை புத்தகத்தை தருமாறு கேட்டுள்ளார். அதனை கொடுப்பதற்கு புவனேஸ்வரி மறுத்ததையடுத்தே இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு பின்னர் அது கொலையில் முடிந்துள்ளது.
புவனேஸ்வரிக்கு இலங்கையில் கணவனும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :