அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை இளைஞரின் விசாவை இரத்து செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
டி.செல்வராஜா என்ற 21 வயதுடைய இலங்கை இளைஞரின் விசாவே இவ்வாறு இரத்து செய்யப்படவுள்ளது.
பல்கலைக்கழக விடுதியில் வைத்து மாணவி ஒருவரை குறித்த இளைஞர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி மாணவருக்கு பிணை வழங்கினார்.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி குறித்த இளைஞன் அங்கு தங்கியிருந்ததாகவும் அவருக்கு தற்காலிக விசா அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments :
Post a Comment