இலவச குடி நீர் வழங்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்


( எஸ்.அஷ்ரப்கான்)

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனின் சொந்த நிதி
ஒதுக்கீட்டிலிருந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்றும் சமூர்த்தி
நிவாரணம் பெறும் 30 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக இலவச குழாய்நீர்
வழங்கும் நிகழ்வு நேற்று (05) அவரது கல்முனை அலுவலகத்தில் மாகாண சபை உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் எம்.ஐ.எச். ஜமால் தலைமையில்
நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஆரிப்
சம்சுதீன் அவர்களும், கௌரவ அதிதிகளாக கல்முனை நீர்வழங்கல் வடிகாலமைப்புச்
சபை பொறுப்பதிகாரி எம்.எம். முனவ்வர், சாய்ந்தமருது நீர்வழங்கல்
வடிகாலமைப்புச் சபை பொறுப்பதிகாரி எஸ்.எல்.ஏ. மஜீட் ஆகியோரும், மற்றும்
விசேட அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், கல்முனை
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டப்ளியு. அப்துல் கபார், ஆரம்பக்கல்வி
பிரதிக்கல்விப் பணிப்பாளர் இஸட்.எம். நதீர் மௌலவி ஆகியோரும்
பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்.

இங்கு கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனுக்கு பயனாளிகளால்
பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :