கிரிக்கெட் விளையாட்டின் மூலம் இலங்கை இந்தியாவிற்கு அடிபணிந்திருப்பதாக வெளிப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் வர்த்தகர்கள் இணைத்துக் கொண்டமையின் காரணமாக இலங்கை கிரிக்கெட் இவ்வாறு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கிரிக்கெட் பாதுகாப்பை விட இவர்களுக்கு பணத்தை பெறுவதே அவசியமாக இருப்பதாக அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டார்.
2008ஆம் ஆண்டு தான் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்தபோது இந்தியா பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்ததாக அவர் கூறினார்.
எப்படியிருப்பினும் கிரிக்கெட் பற்றிய அறிவற்ற அமைச்சர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டன. இதனால் கிரிக்கெட்டிற்கு பாதிப்பு ஏற்படும் என உணர்ந்து தான் அதிலிருந்து வெளியேறியதாக ரணதுங்க மேலும் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment