நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளை கதிரியக்க பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டாம் என நியூசிலாந்து விடுத்த கோரிக்கையை தேசிய அணுசக்தி அதிகார சபை நிராகரித்துள்ளது.
இலங்கைக்கு வருகைதந்துள்ள நியூசிலாந்தின் சிறுகைத்தொழில் அமைச்சின் பிரதிநிதிகள் இருவருடன் இது தொடர்பாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே அதிகார சபை இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.
தமது நாட்டு பால்மா வகைகளை கதிரியக்க பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டாம் என குறித்த இருவரும் கேட்டுக்கொண்ட போதிலும் அவர்கள் எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை என தேசிய அணுசக்தி அதிகார சபையின் தலைவர் கலாநிதி ரஞ்சித் விஜேவர்தன குறிப்பிட்டார்.
கதிரியக்க பதார்த்தங்கள் அடங்கியுள்ளனவா என்பதைக் கண்டறிய தேசிய அணுசக்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் பின்னரே இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மா வகைகள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றன.(N1ST)
.jpg)
0 comments :
Post a Comment