ஜப்பானின் பிரதிப் பிரதமர் டரோ அசோ மற்றும் பாராளுமன்ற சிரேஷ்ட உப நிதி அமைச்சர் யுக்கோ ஒபுச்சி ஆகியோர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
இக்குழுவினர் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் அழைப்பிற்கிணங்க ஜப்பானின் பிரதிப் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இக்குழுவினர் நாளை (03) இலங்கையிலிருந்து புறப்படவுள்ளனர்.
இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் இவர்கள் இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
.jpg)
0 comments :
Post a Comment