மே தின ஊர்வலத்தில் ஒருவர் மரணம்

நுவரெலியாவில் நடைபெறும் மேதின விழாவிற்கு சென்றுக்கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மக்களை ஏற்றிக்கொண்டு நுவரெலியா நோக்கி பயணித்த பஸ் வண்டியின் மிதி பலகையில்
கோசங்களை எழுப்பியவாரு பயணித்த அவர் அக்கரப்பத்தனை பிரதேசத்தில் வைத்து தவறி கீழே
விழுந்து மரணித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் டயகம 1ஆம் பிரிவை சேர்ந்த 35 வயதுடைய ஒருபிள்ளையின் தந்தையான
கருப்பையா காமராஜ் என அக்கரப்பத்தனை பொலிசார் தெரிவித்தனர்.

இவர் நுவரெலியா நகரில் இன்று பிற்பகல் நடைபெற உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின்
மேதின கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவரின் சடலம் லிந்துலை அரச வைத்தியசாலையில் இருந்து நுலரெலிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதுடன். அக்கரப்பத்தனை பொலிசார் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :