புல்மோட்டையில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

(பஹ்மியூஸூப்)
திருகோணமலை புல்மோட்டை கனிப்பொருள் கூட்டுத்தாபன ஊழியர்கள் 30.04.2013 செவ்வாய் கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

 மேலதிக போக்குவரத்துக் கொடுப்பனவு, தூசி துப்பரவு முதலானவற்றுக்கு பத்தாயிரம் ரூபா தருவதாக அரச வளங்கள் வர்த்தக முயற்சி அபிவிருத்தி அமைச்சர் தயாசிறி திசேர அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புல்மோட்டை கனிப்பொருள் கூட்டுத்தாபனத் தலைவர் டிசான் குணசேகர அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தார். 

எனினும் குறித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே வாக்குறிதியளிக்கப்பட்ட கொடுப்பனவை வழங்குமாறு கோரியே ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஐக்கிய வர்த்தக தொழிலாளர் சங்கம் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகளினால் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. தமது கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேலும் தொடருமென ஊழியர்கள் தெரிவித்தனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :