கிழக்கு மாகான உள்ளூராட்சி மன்றங்களில் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான கூட்டம்.

(அகமட் எஸ். முகைடீன்)
கிழக்கு மாகானத்தில் காணப்படும் உள்ளூராட்சி மன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான மீளாய்வுக் கூட்டம் நேற்றுமுன்தினம் (30.04.2013) கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டீ.எம்.சரத் அபேகுணவர்தன தலைமையில் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் திருகோணமலையில் நடைபெற்றது.

இதன்போது ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்கள் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்பட்டு அவற்றிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஆளனி மற்றும் மேலதிகமாக தேவைப்படுகின்ற ஆளனி என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்தோடு குறித்த வெற்றிடங்களை எவ்வாறு நிரப்புவது தொடர்பிலும் கருத்துரைக்கப்பட்டது. மேலும் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற புறநெகும, ஜெய்கா திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இங்கு கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவிக்கையில். மாநகர சபையின் சீரான செயற்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மாகான சபை உறுப்பினர்கள் சிலர் செயற்படுவதாக குற்றம் சாட்டினார். இவர்கள் மாநகர சபை அதிகாரிகளின் நடவடிக்கைகளில் தலையீடுகளை மேற்கொள்கின்றனர். அத்தோடு மாநகர சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தடைகளை ஏற்படுத்த முனைகின்றனர் எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் இங்கு தெரிவிக்கையில் பிரதேச செயலகங்கள் மற்றும் ஜெய்க்கா போன்றவற்றினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிரித்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் மாநகர சபைக்கு தெரியப்படுத்தப் படுவதில்லை. அவர்கள் மேற்கொள்கின்ற செயல்திட்டங்களில் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற சந்தர்ப்பத்தில் மாத்திரம் அவற்றுக்கு தீர்வினை பெறும்வகையில் மாநகர சபையினை நாடுகின்றனர். அவ்வாறில்லமல் அவர்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மாநகர சபையுடன் கலந்துரையாடி மாநகர பொறியியலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடனும் கண்கானிப்பிலும் நடைபெறுகின்றபோது முழுமைமிக்க பூர்த்தியான செயற்திட்டமாக மக்கள் பயன்பாட்டிற்கு அமையும் எனத் தெரிவித்தார்.

மேற்படி பிரச்சினை சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் காணப்படுவதாக உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களினால் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதம செயலாளர் இதற்குபதில் அளிக்கையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்ற நிறுவனங்களுடனான ஒருக்கிணைப்பு கூட்டம் நடைபெறுகின்றபோது இது தொடர்பில் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்து எதிர்காலத்தில் உள்ளூராட்சி மண்றங்களுடன் ஒருங்கினைந்து செயற்படுவதற்கு ஆவன செய்வதாக தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ. அஸீஸ், பிரதி பிரதம செயலாளர் எம்.சி.எம். சரீப், உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் எம். உதயகுமார், உள்ளூராட்சி மன்றங்களின் முதலவர்கள், தவிசாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :