
(முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)
முசலிப் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த கூளாங்குளப் பிரதேச மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்ட
வீதிப்போக்குவரத்துப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.மழைக்காலங்களில் இப்பிரதேச மக்கள் போக்கவரத்துச்
செய்வதில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.
வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கிராமங்களில் 90சதவீதத்திற்கு; மேல் மீள்குடியேறிய
பிரதேசமாக இப்பிரதேசம் நிகழ்கிறது.இப்பிரதேச மக்கள் உலக வங்கியால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளை புத்தளத்தில்
பெறாமல் தமது பூர்வீகப் பிரதேசத்தில் றெ;றுக்கொண்டமையால் கிராமம் பல கல்வீடுகளை கொண்டு கம்பீரமாக காட்சி
அளிக்கின்றது.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் மூலம் தார் வீதியாக புணரமைக்கப்பட்டுள்ளது .இவ்வீதி புனரமைப்புகாகப் பாடுபட்டுழைந்த
அமைச்சர்களான கௌரவ றிசாத் பதியுதீன் அவர்கள்,பசீல் ராஜபக்ச அவர்கள்,வடமாகாண ஆளுநர் கௌரவ சந்திர சிறி
அவர்கள்,முசலிப் பிரதேச சபைத்தவிசாளர் அ.வ.எஹியான் போன்றோருக்கும். பிரதேச மக்கள் நன்றியை தெரிவித்துக்
கொள்கின்றனர்.
இம்முறை வெளியான கா.பொ.த சா-த பெறுபேற்றில் முசலி மஹிந்தோதய ம.வி.யில் சாதனைபடைத்த
மாணவியும் இப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.கல்வியில் சாதனை புரியும் கிராமமாக இப்பிரதேசம்
முன்னேறி வருகின்றது.
0 comments :
Post a Comment