கண்டி தலதா மாளிகை முன்பாக தீக்குளித்து இறந்த பௌத்த பிக்குவான போவத்த இந்திரரத்ன தேரரின் ஈறுதிச்சடங்கில் உரையாற்றிய பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன மீது தண்ணீர் போத்தல்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இரத்தினபுரி கஹவத்தையில் உள்ள பாடசாலை மைதானத்தில் நேற்றுமாலை கடுமையான பாதுகாப்புக்கு இந்திரரத்ன தேரரின் இறுதிச்சடங்கு இடம்பெற்றது.
இவ் இறுதிச்சடங்கின் போது வன்முறைகள் வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதால், ஏராளமான பொலிஸாரும், சிறப்பு அதிரடிப்படையினர், மற்றும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பௌத்த பிக்குகள், அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததால், பாரிய வன்முறைச் சம்பவங்கள் இன்றி இறுதிச்சடங்கு இடம்பெற்றது.
எனினும் அமைச்சர் ஜோன் செனவிரத்ன இறுதிச்சடங்கில் உரையாற்றிய போது, அவருக்கு இடையூறு செய்யும் முகமாக கூச்சல் போட்டு எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்களும் பௌத்த பிக்குகளும், அவர் மீது தண்ணீர் போத்தல்களையும் வீசியுள்ளனர்.
அவர்களைக் கட்டுப்படுத்த முற்பட்ட பொலிஸார் மீதும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனினும், அமைச்சர் ஜோன் செனவிரத்னவை பேச விடுமாறு, ஜாதிக ஹெல உறுமய தலைவர் ஓமல்பே சோபித தேரர் தாக்குதல் நடத்தியோரிடம் கேட்டுக் கொண்டார்.
அதேநேரம், அமைச்சர் ஜோன் செனிவிரத்னவின் உரையின் பின்னர், அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



0 comments :
Post a Comment