வடமாகாண காணி சுவீகரிப்பு இராணுவ முகாம்களை அமைப்பதற்காக அல்ல எனவும் வடக்கு மக்களின் நலனுக்கு எனவும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த கத்துருசிங்க தெரிவித்துள்ளார்.எனினும் அரசியல்வாதிகள் வடக்கின் காணி சுவீகரிப்பு தொடர்பில் பொய்ப் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வலிகாகம் வடக்கு பிரதேச நிலத்தை பெற்று பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் என்பவற்றை விஸ்தரிப்பு செய்வயவுள்ளதாக மஹிந்த கத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கு துரித அபிவிருத்திக்கு உட்பட்டு வருவதாக குறிப்பிடும் அவர், 30 வருட யுத்தம் நிறைவடைந்த நிலையில் வடக்கு மாகாணம் மாற்றமடைந்து விட்டதாகவும் கூறினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணி சுவீகரிப்பு இடம்பெறுவதாக இந்திய ஊடகம் ஒன்று யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியை கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடமராட்சி வடக்கு பிரதேசம் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை மக்களின் நிலம் சுவீகரிக்கப்படும் போது அதற்காக அவர்களுக்கு சந்தையிலுள்ள பெறுமதி நஷ்டஈடாக வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
எனினும் வடக்கில் காணி சுவீகரிப்புக்கு மக்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்டோர் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதற்கு எதிராக பல ஆர்ப்பாட்டர்கள், கவனயீர்ப்பு போராட்டங்களையும் மேற்கொண்டிருந்தனர்.
இறுதியாக தெல்லிப்பழையிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது காணி சுவீகரிப்பிற்கு எதிராக பொதுமக்கள் 5,000 வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்நடவடிக்கையின் காரணமாக அவர் குற்றத்தடுப்பு புலனாய்வுத் துறையினரினால் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment