குழந்தைகளை கைவிட்டு வெளிநாடு செல்ல முயற்சித்த 4 பெண்கள் தடுக்கப்பட்டனர்.


சபீக்
குழந்தைகளைக் கைவிட்டு மத்திய கிழக்கு நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லவிருந்த நான்கு பேர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஏறாவூர் பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் தெரிவித்தார்.

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை கைவிட்டு விட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லவிருக்கின்றார்கள் என்கின்ற முறைப்பாடுகள் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் தடுக்கப்பட்டார்கள் என அவர் தெரிவித்தார்.

இவ்விதம் தம்மிடம் கி
டைக்கப்பெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்து அது பற்றித் தாம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு அறிவித்ததன் பிரகாரம் அவர்கள் விமான நிலையத்தில் வைத்துத் தடுக்கப்பட்டு மீண்டும் கைக் குழந்தையுடன் இணைக்கப்பட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் அவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்கு நிதியுதவியும் உள்ளூரிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் தொழில் வாய்ப்புப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

சிறுவர்களைக் கை விட்டு வீட்டுப் பணிப்பெண்களாக மத்திய கிழக்கு செல்வோர் பற்றிய விழிப்புணர்வு இப்போது பொதுமக்களிடையே அதிகரித்திருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :