அஸாத் சாலியை விடுதலை செய்யவும் உலமா சபை ஜனாதிபதிக்கு கடிதம்.


ஸாத் சாலியின் உடல் நிலையைக் கருத்திற் கொண்டு அவரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்விடுத்துள்ளது.

உலமா சபையின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கையொப்பமிட்டு இன்று அனுப்பி வைத்துள்ள குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அஸாத் சாலி இரத்த அழுத்தம் மற்றும் குருதியுறையா நோய் என்பவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தொடர்ந்தும் தடுத்து வைப்பதாகது அவரது உடல் நிலையை மேலும் பாதிப்பதாகவே அமையும்.

இதனடிப்படையில் அஸாத் சாலி கைது செய்யப்பட்டமைக்கான காரணங்களை மீள் பரிசீலனை செய்யுமாறும் அவரது உடல் நிலையைக் கருத்திற் கொண்டு அவரை விடுதலை செய்யுமாறும் வேண்டுகிறோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஸாத் சாலியை விடுவிக்குமாறு கோரி முஸ்லிம் கவுன்சில் ஒப் சிறீலங்காவும் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :