மின் கட்டண மாற்றங்கள் குறித்து இன்று இறுதித் தீர்மானம்: இலங்கை மின்சார சபை


புதிய மின் கட்டண உயர்வுக்கு ஏற்ப, மின் கட்டண அறிவீடு மாற்றங்கள் குறித்து இன்று இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கட்டண அறவீடு தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு ஏற்படுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 20ம் திகதி தொடக்கம் புதிய மின் கட்டண மாற்றம் அமுலுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மின் கட்டண உயர்வுக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால் மின் கட்டண உயர்வை குறைக்கவும் நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் நேற்று தீர்மானித்தது.
உலக தொழிலாளர் தினத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மின் கட்டண குறைப்பு, நிவாரணம் குறித்து கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :