தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை போலி கடவுச்சீட்டுடன் ஜேர்மனிக்கு அனுப்பி வந்த செயற்பாடு ஒன்று முடக்கப்பட்டுள்ளது.இவ்வாறான இரண்டு பேர் நேற்றைய தினம் ராமநாதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் போலியான இந்திய கடவுச் சீட்டுகளை தயாரித்து, தமிழகத்தில் உள்ள அகதிகளை ஜேர்மனிக்கு அனுப்பி வந்துள்ளமை தெரியவந்ததைத் தொடர்ந்து கைதாகியுள்ளனர்.
தமிழக விசாரணை பிரிவு பொலிஸ் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
அவர்களிடம் இருந்து 11 லட்சம் ரூபாய் பணமும், 60க்கும் அதிகமான போலி கடவுச் சீட்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment