அட்டாளைச்சேனையில் பொலிஸ் ஜீப்புக்கு கல்லெறிந்த இரு இளைஞர்கள் கைது.


லங்கை இளைஞர் பாராளுமன்ற தேர்தலின் போது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்படுத்தியதாக  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (04) மாலை 3.30 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸாரின் ஜீப் வண்டி மீது குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிய வருகிறது. இச்சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்
பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :