சின்னப்பாலமுனை சுப்பர் ஓகிட் விளையாட்டுக் கழகத்தின் 25 வருட நிறைவு.

(பி. முஹாஜிரீன்) 


சின்னப்பாலமுனை சுப்பர் ஓகிட் விளையாட்டுக் கழகத்தின் 25 வருட நிறைவு வெள்ளிவிழாவையொட்டி சின்னப்பாலமுனை அல் ஹிக்மா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மின்னொளி கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி வெள்ளிக்கிழமை (03) இரவு நடைபெற்றது. 

சுப்பர் ஓகிட் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் ஆசிரியருமான பி. முஹாஜிரீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி. பைசல் காசிம் கலந்துகொண்டதுடன் விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி யூ.எல்.ஹாஜா முகைதீன் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். தாஜுடீன், கழக ஆலோசகர்களான ஏ.எல். ஜெமீல், எம்.எஸ்.எம்.ஹனிபா, ஏ. உதுமாலெவ்வை, ஆர்.டி.எஸ். தலைவர் எஸ்.எம். உதுமாலெவ்வை ஆகியோர் கலந்துகொண்டனர்.
;. 
சுப்பர் ஓகிட் வெள்ளிவிழா கிண்ண இறுதிப்போட்டியில் கல்முனை ஹிங்செவன் அணியும் ஒலுவில் சீகாஸ் அணியும் பங்குபற்றின. இதில் கல்முனை ஹிங்செவன் அணி வெற்றியீட்டி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதுடன் ஒலுவில் சீகாஸ் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. பராளுமன்ற உறுப்பினர் எம்.சி. பைசல் காசிம் வெற்றி பெற்ற அணிகளுக்கு காசோலை மற்றும் வெற்றிக்கிண்ணம் என்பவற்றை வழங்கி வைத்தார். 

வெற்றிபெற்ற சம்பியன் அணிக்கு ரூபா 12000 பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் இரண்டாமிடம் பெற்ற அணிக்கு ரூபா 7000 பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :