
பிரேசிலின் றியோ டி ஜெனையேராவில் ஒடும் பஸ்சில் பெண் ஒருவர் பாலியல் பாலத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுதம் ஏந்திய குறித்த சந்தேகநபர் பெண்ணை பாலாத்காரத்திற்கு உட்படுத்திய பின்னர் தப்பிச் சென்றுள்ளார்.
அத்துடன் ஏனைய பயணிகளிடம் இருந்த பொருட்களையும் அவர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக நேரில் கண்டவர்களை மேற்கோள்காட்டி, பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த குற்றம் பிரேசில் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக ஊடகங்களில் கலந்துரையாடப்படும் விடயமாக மாறியுள்ளது.
அத்துடன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கால்பந்தாட்ட போட்டிகள் மற்றும் 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை அதிகரித்துள்ளது.
0 comments :
Post a Comment