இன்னுமொரு பிரபாகரனாக அசாத் சாலியை உருவாக விடமாட்டேன் -கோத்தபாய


தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி மட்டுமன்றி தீவிரவாதத்தை தூண்டும் பல நபர்கள் பற்றியும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

திவைன சிங்கள பத்திரிகை பேட்டி ஒன்றிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார் . மேலும் அவர் தெரிவித்துள்ள தகவலில் .

பிரபாகரன் அன்று ஆயுதம் ஏந்திய போது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் இளைஞர்களின் பருவக் கோளறாக இந்த போராட்டத்தைக் கருதினார். எனினும், இறுதியில் அமிர்தலிங்கம் அதற்கு தனது உயிரை விலையாகக் கொடுத்தார் இந்தியாவில் அஸாத் சாலி வெளியிட்ட கருத்தின் காரணமாகவே அஸாத் சாலி கைது செய்யப்பட்டார். 

பாதுகாப்புச் செயலாளராக நான் கடமையாற்றும் வரையில் தீவிரவாதத்திற்கு இடமில்லை.அஸாத் சாலியினால் பிரபாகரனாக உருவாக முடியாது, பிரபாகரன்கள் உருவாகுவதற்கோ அல்லது உருவாக்கப்படுவதற்கோ நான் இடமளிக்க மாட்டேன்.

அஸாத் சாலி கைது செய்யப்பட்டமைக்காக முதலைக் கண்ணீர் வடிப்போர் பற்றியும் நாம் நன்றாக அறிவோம் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :