ஆசாத் சாலியை விடுதலை செய்யக்கோரி அம்பாரை மாவட்டத்தில் இன்று ஹர்த்தால்



(எஸ்.அஷ்ரப்கான், எம்.ரி.எம்.பர்ஹான்)
தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான அஸாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் இன்று வியாழக்கிழமை அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு முஸ்லிம் பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

குறிப்பாக கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்துவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.

இருப்பினும் வழமைபோன்று போக்குவரத்து இடம்பெறுகிறது. இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.அஸாத் சாலியின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு துண்டுப்பிரசுரங்கள் மூலம் வேண்டுகோள்விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கல்முனை பிரதேச பாடசாலைகள் திறக்கப்பட்டு ஆசிரியர்கள் வருகை தந்திருந்தபோதும், மாணவர்களின் வருகை மிகக் குறைவாக இருப்பதை அவதானிக்க முடிந்தது.அரச அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தாலும், வங்கிகள் தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. போக்குவரத்து வழமைபோல் இடம்பெற்றது. பயணிகளின் வருகை குறைவாக இருந்தமையை கல்முனை பிரதேசத்தில் அவதானிக்க முடிகிறது.

இதேவேளை ஹர்த்தால் அனுஷ்டிக்கவோ இயல்பு நிலைமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படவோ வேண்டாம் என இராணுவத்தினர் கிழக்கு மாகாண முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சில இடங்களில் கடைகளை திறந்து வைப்பதற்கான தீவிர முயற்சிகளில் இராணுவத்தினரும் பொலிசாரும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :