தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வில் 60 அலகு வரையிலான மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாத அதேவேளை 180 அலகு வரையிலான மின் கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பு, கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஒரு அலகு முதல் 60 அலகுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு புதிய மின்கட்டண அதிகரிப்பை அமுல்படுத்த வேண்டாம். அதேபோன்று 180 அலகுகள் வரை மின் கட்டண அதிகரிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தால் குறைப்பை செய்து நிவாரணம் வழங்ப்படும்.
இன்று மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக பந்தங்கள் பிடிக்கின்றனர். இவர்களே தான் ஈழத்துக்காகவும் பந்தம் பிடித்தனர். நாட்பை பிரிப்பதற்காக பிரபாகரனுக்கு பந்தம் பிடித்தனர். தற்போது புலம்பெயர் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் செயற்படுகின்றனர்.
நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை இல்லாதொழித்த போதும் சர்வதேசம் எம்மீது குற்றம் சுமத்தியது. ஆனால் தற்போது மின்கட்டண உயர்வுக்கு எதிராக கோசங்கள் எழுப்புகின்றனர்.
ஆனால் அன்று மேல்கொத்மலை மின்திட்டம் மற்றும் நுரைச்சோலை மின்திட்டம் ஆகியவற்றை ஆரம்பிக்க பயந்தனர். ஆனால் எம்முடைய அரசாங்கம் அதனை செய்து காட்டியுள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வரும் போது நாட்டில் 65 வீதமானவருக்கே மின்சாரம் இருந்தது. ஆனால் தற்போது 95 வீதமானோர் மின்சாரத்தை உபயோகிக்கின்றனர். ஆனால் தீப்பந்தத்தை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
மண்ணெண்ணெய் விளக்கு யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். ஒரு வேளை எமது அரசாஙகத்தாலும் மின்சார திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் இருந்திருந்தால் உண்மையில் இன்று பந்தத்தை தான் பிடித்திருக்க வேண்டும் என்றார்.

0 comments :
Post a Comment