கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டோர் விசாரணை முடியும் வரை விளையாடத் தற்காலிகத் தடை

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பொட் பிக்சிங் எனப்படும் சூதாட்டம் (spot-fixing) மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 வீரர்களும் இவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபட்டு டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்தால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விசாரணை முடியும் வரை அவர்களை தற்காலிகமாக தடை செய்துள்ளது.

அத்துடன் கிரிக்கெட்டில் ஊழலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரித்து உள்ளது. இதனால் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூவரில் ஸ்ரீசாந்த் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். மற்ற இருவரும் உள்ளூர் போட்டியில் விளையாடியவர்கள்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவரான ரவி சவானி இந்த ஸ்பொட் பிக்சிங் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்துகிறார்.

அவரது தலைமையிலான ஊழல் தடுப்பு குழு விசாரணை நடத்தி கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் விசாரணை அறிக்கையை சமர்பிப்பார்.

ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு கிரிக்கெட் வாரிய துணைத் தலைவரும், பாரதீய ஜனதாவை சேர்ந்த வருமான அருண் ஜேட்லி தலைவராக உள்ளார்.

ஒழுங்கு நடவடிக்கை குழு இந்த மூவர் மீதும் ஆயுள்கால தடையை விதிக்கும் என்று தெரிகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :