(எஸ்.அஷ்ரப்கான்)அகில இலங்கை ஆசிரியர்களுக்கான விளையாட்டுப்போட்டியில் சாய்ந்தமருது அல்-
ஜலால் வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் ரீ.கே.எம். சிராஜ் 100 மீட்டர்
ஓட்டப்போட்டியில் அகில இலங்கை ரீதியில் 3ஆம் இடத்தைப்பெற்று
வெண்கலப்பதக்கத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இப்போட்டி கடந்த 28.04.2013 பண்டாரவளை பொது மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டியில் கல்முனை வலயக்கல்வி பிரிவுக்குக் கிடைத்த ஒரேயொரு பதக்கம்
இதுவாகும்.
இவ்வாசிரியரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது அல்-
ஜலால் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.நபார் தலைமையில் பாடசாலை விசேட
காலைக்கூட்ட நிகழ்வில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர்
யு.எல்.எம். ஹாஸீம் மற்றும் விசேட அதிதிகளாக சாய்ந்தமருது கோட்டக்கல்விப்
அதிகாரி எஸ்.எல்.எம். சலீம், உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.ஏ.
சத்தார் ஆகியோர் உட்பட பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது, ஆசிரியருக்கு நினைவுச்சின்னம், பரிசில்களும்
அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டதுடன், க.பொ.த. சா.தர மாணவர்களாலும் பரிசு
வழங்கி கௌரவிக்கப்பட்டது.

0 comments :
Post a Comment