அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லும் தேவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸுக்கு கிடையாது ஆனால் அரசாங்கத்துடனான சில உடன்பாடின்மை தொடர்பாக கலந்துரையாடவுள்ளோம் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையேயான சந்திப்பொன்று கட்சியின் தலைமையகமான தாருஸ் ஸலாமில் இன்று நடைபெறுகிறது. இதனை மேற்கொள் காட்டி சில ஊடகங்கள் நான் அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லவுள்ளதாகவும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் செய்திகள் பிரசுரமாகின.சில ஊடகங்களின் ஆசிரியர்கள் பதவியை விட்டு விலகப் போவதாக ஆசிரிய தலையங்கங்கள் எழுதியுள்ளனர். எனினும், இந்த தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது.
அரசாங்கத்துடன் சில விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. அது தொடர்பிலான விமர்சனங்களை தொடர்ந்தும் முன்வைப்பேன். இதன் மூலம் அரசாங்கத்தை விட்டு விலகி விடுவோம் என அர்த்தப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறியுள்ளார் .
0 comments :
Post a Comment