சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று திடீரென பஸ் மீது கல்வீச்சி தாக்குதல்.

சென்னை கொளத்தூர் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் கண்ணன். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது ஒரே மகன் சண்முகசுந்தரம் (12), 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர்களது சொந்த ஊரான உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாம்பாக்கத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. இதற்காக கடந்த 2-ந்தேதி சண்முக சுந்தரம் தனது தந்தை கண்ணனுடன் அங்கு சென்றார். பின்னர் இருவரும் அரசு பஸ்சில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். 

திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை அருகில் பஸ் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று திடீரென பஸ் மீது கல்வீசி தாக்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். 

அப்போது கண்ணாடியை உடைத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பஸ்சுக்குள் வந்து விழுந்த கல் சண்முகசுந்தரத்தின் முகத்தை பதம் பார்த்தது. இதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. 2 கண்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. பற்களும் உடைந்து நொறுங்கின. 

இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த சண்முக சுந்தரத்தை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் துணையுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றனர். அங்கு முதல்-உதவி செய்து விட்டு உடனடியாக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு சண்முக சுந்தரத்தை கொண்டு சென்றனர். 

அங்கு சென்று சிகிச்சை அளித்த பின்னரும் அவரது மூக்கில் இருந்து ரத்தம் கொட்டுவது நிற்கவில்லை. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக சண்முகசுந்தரம் அழைத்து வரப்பட்டார். 

இங்குள்ள டாக்டர்கள் அவரது மூக்கில் ஆபரேசன் செய்து ரத்தம் கொட்டியதை கட்டுப்படுத்தினர். இதுவரை சண்முகசுந்தரத்தின் மருத்துவ செலவுக்கு ரூ.1.5 லட்சம் வரை செலவாகி இருப்பதாக அவரது சித்தப்பா கருணாகரன் தெரிவித்தார். வீட்டில் இருந்த நகைகள் அனைத்தையும் அடகு வைத்து இந்த பணத்தை தயார் செய்துள்ளதாக அவர் கூறினார். 

இன்னும் சில மாதங்கள் கழித்து மேலும் ஒரு ஆபரேஷன் செய்யவேண்டும் என்றும், இதற்கு ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்றும் டாக்டர்கள் கூறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.chenaitamilulaa.net
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :