எங்களை விமர்சிக்க நபாறுக்கு எந்த தகுதியும் இல்லை-கல்முனை பஷீர்


நானும் சேர்ந்துதான் சபை அமர்வினை பகிஸ்கரித்தேன். ஆனால் உண்மையில் சுகஈனமுற்றும் இருந்தேன். இது பற்றி பேசுவதற்கு கட்சிப்பலம் இல்லாத உறுப்பினர் நபாருக்கு எந்த அருகதையும் கிடையாது என கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வரும் இந்நாள் உறுப்பினருமான ஏ.ஏ. பஷீர் தெரிவித்தார்.

கடந்த 29.04.2013 அன்று இடம்பெற்ற சபை அமர்வினை உண்மையில் நானும் சேர்ந்துதான் பகிஸ்கரித்தேன். 28.04.2013 அன்று இடம்பெற்ற குழுக்கூட்டத்தில் முதல்வர் உறுப்பினர் ஒருவருக்கு தகாத வார்த்தை பிரயோகம் செய்தமையை கண்டித்தே நாங்கள் பாகிஸ்கரித்தோம்.

உறுப்பினர் நபாருக்கு சபை பகிஸ்கரிப்புக்கும் – வெளிநடப்பிற்கும் அர்த்தத்தினை விளங்கிக்கொணட பின்னரே ஊடகங்களுக்கு அறிக்கை விடுவது ஆரோக்கியமானதாக இருக்கும் என நினைக்கின்றேன். சபையை பாகிஸ்கருத்த வேளையில் நான் சுகவீனமுற்று இருந்தது இயற்கையானது. சபை அமர்வில் எனக்கு விடுமுறை வழந்கப்பட்டிருப்பதற்கு நான் பொறுப்பல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கட்சிப்பலம் இல்லாத உறுப்பினர் நபாரை இதுவரை காலமும் நாங்கள் அரவானைத்துச் சென்றமைக்கு ஆளும் தரப்பினரையே விமர்சிக்கும் அளவுக்கு முனைந்துள்ளார். இது அவரின் நன்றிகெட்ட தனத்தினையே வெளிப்படுத்துகின்றது. ஆளும் தரப்பான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறித்த அனைத்து சலுகைகளையும் வழங்கிய போதும் அடிக்கடி ஆளும் தரப்பினரை உரசிப்பார்ப்பதை நிருத்திகொள்ள வேண்டும் என வினயமாக கேட்டிக்கொள்கின்றேன்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீடத்தில் கலந்தாலோசனை செய்யப்பட வேண்டிய விடயமான இரண்டு வருட முதல்வர் பகிர்வு விடயத்தினை எமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மட்டுமே பேச வேண்டும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிர்ந்த எந்தக் கட்சிக்கும், எந்த கட்சி உறுப்பினருக்கும் இது பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது. இது தொடர்பாக விட்ட அறிக்கை ஆழம் தெரியாமல் காலை விட்டது போன்றதாகும். இது விடயமாக பேச நபாருக்கு என்ன தேவை ஏற்பட்டது?

இவரைப்போன்ற உறுப்பினர்களுக்கு முதல்வருடன் உறுப்பினர்கள் பிளவுபட்டு தொடர்ந்தும் விலகி இருப்பதையே விரும்புவதாக தெரிகின்றது. கல்முனை மாநகர சபையை பொருத்தவரையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 11
பேர் இருந்தும் நபார் ஆளும் தரப்பு பிரதி முதல்வர் மற்றும் உறுப்பினர்களையும் கண்டிப்பதையும் விமர்சிப்பதையும் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவரின் வெட்கத்தை இனிமேல் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தாமல் இருப்பது சிறப்பாக இருக்கும் என நம்புகின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :