தன்னை மானபங்கப் படுத்திய பத்திரிகை 500 மில்லியன் நஷ்டயீடு வழங்கவேண்டும் EP அமைச்சர் மன்சூர்.

இசட் சாம்
சுடர்ஒளி பத்திரிகை நிறுவனம் புதிதாக வெளியிடுகின்ற ‘முஸ்லிம் முரசு’ வாராந்த பத்திரிகை தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், 500 மில்லியன் ரூபா மானநஷ்டஈடு கோரியுள்ளார்.

இப்பத்திரிகை பொய்யான தகவல்களை வெளியிட்டு தனது கௌரவத்திற்கும், மானத்திற்கும் பங்கமேற்படுத்தியுள்ளது. இதனால் குறிப்பிட்ட பத்தரிகை ரூபா 500 மில்லியன் ரூபாவை தனக்கு நஸ்டஈடாகத் தர வேண்டுமென்று கோரி தனது சட்டத்தரணி மூலம் மாகாண அமைச்சர் எம்.எம்.மன்சூர் சார்பில் கடிதம் (Letter Demand)) ஒன்று குறிப்பிட்ட பத்திரிகை நிறுவனத்திற்கு அனுப்பட்டுள்ளது.

திருமலையில் பிரதி அமைச்சர் ஒருவரின் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மன்சூர் மது போதையில் இருந்ததாகவும் அங்கு பெரும் ரகளையில் ஈடுபட்டதாகவும் அவரது பெயரை மறைமுகமாக தெரிவித்து இப்பத்திரிகை தனது முதலாவது இதழில் (2013/05/15) தகவல் வெளியிட்டிருந்தது.

இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பொருட்டே தனது சட்டத்தரணி மூலம் தான் இந்த (Letter Demand) மனுவை அனுப்பியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஊடகங்களுக்கு  வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :