இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஹோமாகம மாவட்ட நீதிபதி ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மாவட்ட நீதிபதியின் முதுகெழும்பில் உபாதை உள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டதால் அவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய மாவட்ட நீதிபதியை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பல்லேகம தெரிவித்துள்ளார்.
ஹோமாகம மாவட்ட நீதிபதியின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் நீதிபதியின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு வேறொரு இடத்தில் அவரை தடுத்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment