(எம்.பைஷல் இஸ்மாயில்)
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த உல்லாசப் பயணிகளின் வருகை 14.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இவ்வருடம் கடந்த ஏப்ரல் மாதமளவில் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு உல்லாச பயணிகளின் எண்ணிக்கை 79,829 ஆக காணப்பட்டது. இந்த உல்லாசப் பயணிகளின் வருகையானது கடந்த மார்ச் மாதத்தை விட இது பெருமளவு அதிகரித்துள்ளதாகவும் இந்த வருடம் முதல் நான்கு மாதங்களில் மொத்த உல்லாசப் பயணிகளின் வருகையானது 3 இலட்சத்து 68 ஆயிரத்து 827 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டை விட இவ்வருடம் 11.6 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 2016 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு உல்லாச பயணிகளின் எண்ணிக்கை 25 இலட்மாக அதிகரிக்குமென சுற்றுலா அபிவிருத்திச் செயலகம் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் மேலும் அறிவித்துள்ளது.

0 comments :
Post a Comment