கணவன் கட்டாரில், 20 வயது இளம் மனைவி தூக்கிட்டு தற்கொலை.

ட்டக்களப்பு, மகிழவட்டுவான், கல்குடா கிராமத்தில் இளம் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர். 

மகிழவட்டுவான் கல்குடா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான விஜயகுமார் தீபா (வயது 20) என்பவரே நேற்று (02) இரவு உயிரிழந்துள்ளார். 

வீடொன்றினுள் சடலமொன்று காணப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அவ்வீட்டிலிருந்து சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவர் கட்டார் நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக தொழில் செய்பவரென உறவினர்கள் தெரிவித்தனர். 

நீதிமன்ற உத்தரவின் பேரில் பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி சுகத்பண்டார விஜேசுந்தர தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டனர். 
இவரது சடலம் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :