( எஸ்.அஷ்ரப்கான் )
கல்முனை ஹொலி பீல்ட் விளையாட்டுக்கழகத்தின் 14வது ஆண்டு நிறைவையொட்டி
கல்முனை கிரிக்கெட் சங்கத்தின் அனுசரனையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள
ஹொலிபீல்ட் சம்பியன் கிண்ணம்-2013 ரீ-20 கடினபந்து கிரிக்கெட்
சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி கல்முனை சந்தாங்கேணி
ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாக உள்ளதாக கல்முனை கிரிக்கெட்
சங்கத்தின் தலைவர் எம்.எம். ஜெஸ்மின் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபை பிரதேசத்தைச் சேர்ந்த 12 முன்னணி கழகங்கள்
பங்குகொள்ளும் இச்சுற்றுப்போட்டி நொக் அவுட் முறையில் இடம்பெற உள்ளது.
இச்சுற்றுப்போட்டி விடயமாக ஊடகவியலாளர்கள், விளையாட்டுக்கழகங்களின்
உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு அண்மையில் கல்முனை
கிறீன்ட் பீல்ட் வீட்டுத்திட்ட கூட்டு ஆதன முகாமைத்துவ சபையின்
அலுவலகத்தில் சங்கத் தலைவர் எம்.எம். ஜெஸ்மின் தலைமையில் இடம்பெற்றது.
இச்சுற்றுப்போட்டியில் சம்பியனாக தெரிவாகும் கழகத்திற்கு ஹொலி பீல்ட்
சம்பியன் கிண்ணம் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும், இரண்டாம் இடம்
இடத்தைப்பெறும் கழகத்திற்கு கிண்ணத்துடன் 5 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும்
வழங்கப்பட உள்ளது.
இச்சுற்றுப்போட்டியில் கல்முனை டொப்பாஸஸ், டொப் ஹிரோஸ், யங் பேட்ஸ்,
ஹொலி பீல்ட், டொப்றேங், மிஸ்பாஹ், றினோன், ஜிம்கானா, ஹரிகெய்ன்ஸ், ஸீ
ஸ்டார், ஏஜ் ஸ்டீல், லெஜன்ட் ஆகிய விளையாட்டுக்கழகங்கள்
பங்குபற்றுகின்றன.
இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு பிரதம அதிதியாக துறைசார்ந்த
பிரபலம் ஒருவரை அழைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக சங்கத்தலைவர்எம்.எம். ஜெஸ்மின் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment