இலங்கை முஸ்லிம்களை மியன்மார் முஸ்லிம்களாக மாற்றும் சதி -ஜுனைட் நளீமி


 அன்மைக்காலமாக இலங்கை அரசியலில் முஸ்லிம்களுக்கெதிரான சில பௌத்த அடிப்படைவாத குழுக்கள் செயற்படுவது அமைதியை விரும்பும் இலங்கை மக்களிடத்தில் கவலையை தோற்றுவித்துள்ளது. 

கடந்த 30ஆண்டுகளுக்கும்மேலாக உள்நாட்டில் இடம்பெற்ற கொடூர யுத்தத்தினால் நாடெங்கிலும் மரண ஓழங்களும் அன்றாட வாழ்வில் அச்ச மேலீடும் கானப்பட்டது.

யுத்தம் முடிவடைந்து நாடு அமைதி வளிக்குத்திரும்பிவிடும் என்ற அதீத எண்ணங்களில் கேள்விகுறியை ஏற்படுத்தியதான நிகழ்வாக முஸ்லிம்களுக்கெதிரான செயற்திட்டங்கள் இடம்பெற்றன. 

உலகவரலாற்றில் ஒரு சிறுபான்மை இனம் பெரும்பான்மை இனத்துடன் நீண்ட காலமாக பரஸ்பர நல்லிணக்கத்துடன் வாழ்ந்த சாதணைக்கு அடையாளமாக இலங்கை முஸ்லிம்கள் இருப்பதாக வரலாற்றாசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

அத்தகைய சிங்கள் - முஸ்லிம் உறவுகளில் சீர்குழைவை ஏற்படுத்த வெளிநாட்டு சக்திகளின் பின்புலத்துடன் பௌத்தம் என்ற பெயரில் அடிப்படைவாதம் பேசி வந்தவர்கள் மீண்டும் ஒரு முல்லிவாய்க்காலை அல்லது மியன்மாரை கான முனைவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு முஸ்லிம்களையும் அப்பாவி சிங்கள சமூகத்தையும் மூட்டிவிட்டு குளிர்காய முனையும் சக்திகள் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் தப்புக்கணக்கினை போடுகின்றனர் என்றே நினைக்கின்றேன். 

மியன்மாரில் அதிலும் குறிப்பாக ரோஹிங்யாவில் முஸ்லிம்கள் காலா காலம் இனச்சுத்திகரிப்புக்கு ஆழாக்கபடுவது போன்று இலங்கையிலும் மேற்கொள்ள நினைப்பது சாத்தியப்பாடாகுமா என இங்கு ஆராய்வது பொருத்தம் என கருதுகின்றேன். முன்னால் பர்மாவை போன்றே இலங்கை பௌத்தர்களும்; முஸ்லிம்களும் வந்தேரு குடிகளே. 

என்ற போதும் இவ்விரு இனமும் நீண்ட பல நூற்றாண்டு வரலாற்றினக்கொன்டவர்கள். இலங்கை முஸ்லிம்கள் எப்போதும் சிங்கள அரசர்களுடன் நம்பிக்கையுடன் ஒப்புரவாக செயற்பட்டு வந்துள்ளனர். இலங்கையை படையெடுப்பின் மூலம் ஆதிக்கம்; செலுத்தவேண்டும் அல்லது இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்ற என்னம் அவர்களிடம் இருந்ததற்கான ஆதாரங்கள் என்றும் இல்லை. 

ஐரோப்பிய படையெடுப்பின் போதும் இலங்கை மன்னர்களுடன் இனைந்தே போரிட்டுள்ளனர் என்பதனை வரலாறு சொல்லிக்கொண்டிருக்கின்றது. மருபுரம் பர்மாவை பொருத்தவரையில் (தற்போதய மியன்மார்) முஸ்லிம்கள் அங்கு 'பாகன்'; காலத்துக்கு முதலே படையெடுத்துள்ளனர். இந்தியாவை முஸ்லிம்கள் ஆளுகைக்குற்படுத்தி இருந்ததினால் பர்மாவும் அத்தகைய படையெடுப்புக்களுக்கு ஆலாகியது.

 அது மாத்திரமல்லாமல் இன்று மியன்மாரில் பெரும்பான்மையாக வாழும் பௌத்த 'பர்மன்கள்'; வந்தேரு குடிகலாக இருந்த போதும் நாட்டின் ஆதிக்கத்தை தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டி வரலாற்று நெடுகிலும சிறுபான்மைக்கெதிராக அதிலும் குறிப்பாக் முஸ்லிம்களுக்கெதிரான பகைமையுணர்வுடனேயே செயற்பட்டு வந்துள்ளனர். 

இதனால்தான் அடக்கு முறைக்கெதிராக 'பிரிடிஷாருடன'; இணைந்து பர்மாவை கைப்பற்ற அராக்கன் மக்களுடன் சேர்ந்து இவர்களும் உதவிசெய்தனர். இத்தகைய பௌத்த கொடுங்கோல் அடக்கு முறை நிலை இல்லாததன் காரணமாக இலங்கையில் முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் இனைந்து வாழக்கூடியாதக இருந்தது.

பூர்வீகம் பற்றிய தெளிவு.

பர்மிய முஸ்லிம்களைப்பொருத்தவரை அவர்கள் தமக்கான சரியான பூர்வீக வரலாற்றினை கொண்டிருக்கவில்லை என்பது அவர்களது வரலாற்றை ஆராய்கின்ற போது தெளிவாகின்றது. அடிக்கடி பர்மாவை விட்டும் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டமையினால் அவர்களது வரலாற்று தொடர்பிழந்தும் கானப்படுகின்றது. 

வங்கால சுதந்திரப்போரின் போது பாகிஸ்தானை ஆதரித்த வங்கால முஸ்லிம்கள் தமது இருப்பிடத்தை ரோஹிங்யா பிரதேசங்களில் அமைத்துக்கொண்டதினாலும் அவர்கள் சுதேசிகலாக கருதப்படாமல் அனைத்து பர்மிய முஸ்லிம்களும் சட்ட விரோத குடியேற்ற வாசிகள் என்ற வரையறைக்குள் கொன்டுவர காரனமாய் சிலபோது அமைந்தனர். 

ஆனால் இலங்கை முஸ்லிம்கள் வரலாறு பன்னெடுங்கால வரலாற்றுத்தொடராக கானப்படுவதுடன் சுதேச மக்களுடனான சில இனக்களப்பும் பூர்வீகத்தை உறுதி செய்வதுடன் ஏனைய இனங்களைப்போன்று சுயாதிக்கம் உள்ள தேசிய இனமாக தலை நிமிர்ந்து நிற்க வாய்ப்பாய் அமைந்தது.

மியன்மார் முஸ்லிம்களது இருப்பும்இ சர்வதேச முக்கியத்துவமும்:
மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாகுதலை சர்வதேசம் கண்டும் கானாது போல் இருப்பதற்கு முஸ்லிம்களது கேந்திர இட அமைவு காரணமாக அமைகின்றது. குறிப்பாக மலாக்க நீரினையை அண்டியதான கரையோரமும் இவர்களது வாழ்புல எல்லையில் மைந்திருப்பதனால் பிராந்திய வல்லரசு போட்டியில் ஈடுபட்டுள்ள இந்தியாவும் சீனாவும் தமது கட்டுப்பாட்டிற்குள் அரகான் பிரதேசத்தை வைத்திருக்க போட்டி இடுகின்றன.

 குறிப்பாக சீனாவின் 'முத்துமாலை' திட்டத்தினூடாக ஆபிரிக்க முதல் ஆசியாவின் கோடிவரையான கடற்பாதையினை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முனைகின்றது. இந்தவகையில் மலாக்கா நீரினையூடாக நாள்தோரும் 12 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் செல்கின்றது. அதிலும் சீனாவின் 80மூ கச்சா எண்ணெய் இதனூடாகவே செல்கின்றது. 

அத்துடன் பர்மாவில் கானப்படும் அதிலும் குறிப்பாக அராகன் பிரதேசத்தில் கானப்படும் எரிவாயுவை அபகரித்துக்கொள்வதற்கான திட்டத்தில் மிகக்கவனமாக சீனா செயற்படுகின்றது. மறு பக்கத்தில் இந்தியா சீன மேலாதிக்கத்தை பிராந்தியத்தில் சமநிலைப்படுத்தி தனது 'கிழக்கே பார்' திட்டத்தினை செயற்படுத்த முனைகின்றது. 

குறிப்பாக பர்மா இந்தியாவிற்கும் தென்கிழக்கசியாவிற்கும் இடையிலான பிரதேசமாக இருப்பதனால்; மலாக்கா நீரினையை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும் இந்தியாவிற்கு தேவையாக இருந்தது. 

இதன் இன்னொரு தேவைப்பாடாக இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் போராடும் அஸாம் போராளிகள், மணிப்பூர், நாகா போராளிகள் உள்ளிட்ட 30ற்கும் மேற்பட்ட கிளர்ச்சிக்குழூகளுக்கான ஆயுத விநியோகம் அரகான் பகுதியினூடாக விநியோகிக்கப்படுவதும் அதனைத்தடுக்க இந்தியா முனைப்புக்காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் இந்தியாவும் சீனாவும் நேரடியாக இப்பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியாத போதும் முஸ்லிம்களுக்கெதிரான இனச்சுத்திகரிப்பினை பாரா முகமாக இருப்பதன் மூலம் மியன்மார் அரசின் நற்பினை பேனி தமது இலக்கினை அடைய இவை முற்படுகின்றன. 

இதே போன்று அமெரிக்க ஜேர்மன் நிருவனங்களும் இப்பிரதேசத்தில் கானப்படும் எரிவாயுவை பெறுவதற்கான ஒப்பந்தங்களில் மியன்மார் அரசுடன் இணைந்து செயற்படுவதனால் முஸ்லிம்கள் தமது காணிகள் இழப்பதனை எத்ரித்து நஷ்ட்ட ஈடு கோரியும் சர்வதேச வழக்குகளை பதிவு செய்து நடாத்துவதனால் பாறிய இழப்பீட்டு தொகையை இந்நிருவனங்கள் வழங்க வேண்டியுள்ளது. எனவே ஒட்டு மொத்தமாக இனச்சுத்திகரிப்பு செய்யுமிடத்து தமது முதலீடுகளில் எவ்வித நஷ்ட்டமும் ஏற்படாது என இவை கருதுவதனால் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையினை மேற்கும் கானாது இருந்து விடுகின்றன. 

மறுபுரத்தில் பங்களாதேஷைப்பொருத்தவரையில் ரோஹிங்யா முஸ்லிம்கள் வங்காள புரட்சிக்கும்இ சுதந்திரத்திற்கும் எதிராக செயற்பட்டவர்கள் என்பதுடன் 'மாக்' கடற்கொள்ளையர்கள் அல்லது நாடோடிகள் என்றே அழைத்து வருகின்றனர். இதனால் இவர்கள் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்ட போதும் பங்களாதேஷ் தப்பி வந்தவர்களைக்கூட திருப்பி அநுப்பியதனை கானமுடிகின்றது. 

இத்தகைய பிண்ணனிகளில் நோக்கும் போது மியன்மார் முஸ்லிம்கள் சர்வதேச, பிராந்திய அரசியல் நலன்களுக்கு போட்டியான கேந்திரதானத்தில் இருப்பதனால் அவர்கள் தொடர்பில் மௌனித்து மியன்மார் அரசை சில போது நியாயமும் கான முற்படுவதனை நாம் கானக்கூடியாதாக இருக்கின்றது. ஆனல் இலங்கை முஸ்லிம்கள்து வாழ்புல எல்லைகள் அவ்வாரல்ல. 

கடந்த கால யுத்த சூழ்நிலையினால் மிகக்குறுகிய பரப்புக்குள்ளும், பெரும்பான்மை சமூகங்களின் கீழ் மிகச்சிறுபானமை குடிகலாகவும் வாழ்வதுடன் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களை அவர்கள் இழந்து வாழ்கின்றனர். எனவே இலங்கை முஸ்லிம்களது இருப்பு கேந்திர முக்கியத்துவமோ அல்லது அரசியல் நலன்களைக்கொண்ட இடமாகவோ அமைய வில்லை. 

அதே போன்று அண்டை நாடுகள் காழ்ப்புணர்வு கொள்வதற்கோ அல்லது பலிவாங்கும் எண்ணம் கொள்ளுமலவுக்கோ இலங்கை முஸ்லிம்கள் அண்டைநாடுகளுடன் எவ்வித ராஜதந்திர துரோகங்களும் இழைக்கவில்லை. எனவே மியன்மார் முஸ்லிம்கள் போன்று கவனிப்பாரற்றவகையில் வகை தொகை இன்றி இனச்சுத்திகரிப்பு செய்துவிடவும் முடியாது. 

அத்தோடு யுத்தத்தினால் தோழ்வியுற்று பழிவாங்கு மனநிலையில் உள்ள தமிழினம் முஸ்லிம்கள் மீதான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படுமாயின் அதனை சாக்காக வைத்து இலங்கையில் சிறுபான்மையினருக்கு பாதுக்கப்பில்லை என கூறி தமது தமிழீழ கேர்றிக்கைக்கு சர்வதேச ஆதரவு தேடவும் வாய்ப்பாக அமைந்துவிடும். 

இதன் காரனமாக தமிழ் முஸ்லிம் உறவு மீண்டும் ஒன்றுபட்ட போராட்ட சூழ்நிலையினை நோக்கி தள்ளப்படும் வாய்ப்பும் உள்ளதென ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனை அன்மையில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான பொது பல சேனாவின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழ்த்தேசியகூட்டமைப்பு பாராளுமன்றில் பேசியதனை கூறமுடியும்.

இலங்கை இராணுவ கட்டமைப்பு மியன்மார் ஜுன்டா இராணுவ கட்டமைப்பை நோக்கி நகர்த்தும் நடவடிக்கை.
மியன்மாரில் 1956ல் யு நூ பௌத்த மதத்தை அரச மதமாக மாற்றீயதுடன் ஜென்ரல் நே வின் மியன்மார் யிங்யேபுமு என்ற ஒற்றைப்பண்பாடு என்ற கொள்கையினை அறிமுகப்படுத்தினார்.

 இதற்கும் மேலாக இராணுவ ஆட்சியாளர்கள் தமது அதிகாரத்தை தக்கவைக்க மதத்தை பயண்படுத்திக்கொண்டனர். நாட்டுப்பற்றாளர்களால் உருவாக்கப்பட்ட டாட்மாடா என்ற பர்மிய இராணுவம் பௌத்த சாயம் பூசப்பட்டு தீவிரவாத புத்த பிக்குகளின் உத்வியோடு ஜுன்டா இராணுவம் என பெயர்பெற்று சிறுபான்மை மீதான அடக்கு முறைகளை கட்டவிழ்த்துவிட்டது மாத்திரமின்றி ஜனநாயகத்திற்கான போராட்டங்களையும் மதத்தின் பெயரால் நசுக்கியது. இலங்கையில் தற்கால இராணுவ அமைப்புமுறை மாற்றங்கள் இத்தகைய சந்தேகத்தை ஏற்படுத் துவதாக இராணுவ ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

கடந்த கால புலிகளுக்கெதிரான யுத்தத்தின் போது அரச இராணுவத்திற்கு வீரர்களை கவர்ந்து கொள்வதில் பாடுபட்டு உழைத்த சில அடிப்படைவாத அமைப்புக்கள் இன்றும் வெளிப்படையாக சிறுபான்மையினருக்கான அச்சுருத்தலாக செயற்படுவது மேலும் சந்தேகங்களை வலுவடையச்செய்கின்றது. 

யுத்தம் முடிந்த பின்னர் இராணுவ முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளில் பௌத்த பன்சாலைகளை நிர்மாணம் செய்வதும் புதிதாக சிறுபானமையினர் வாழும் பகுதிகளில் முளைவிடத்தொடங்கும் புத்த சிலைகளும் இன ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்பதுடன் இராணுவத்தை பௌத்த மத பரினாமத்திற்குள் உள்வாங்கும் ஜுன்டா இராணுவத்தின் அத்திவாரமாக சிறுபான்மை தலைமைகள் சிலர் கருதுகின்றனர். 

அதே போன்று வடகிழக்கில் வாழும் மக்களில் 200பேருக்கு ஒரு இராணுவ வீரர் என்ற வகையில் கண்கானிப்பு வேளைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதுடன் இதுவரை காலமும் இலங்கை இராணுவத்தில் காணப்பட்ட மூன்று பிரதான புலனாய்வுப்பிரிவுகளான ஆஐஊ1இ2இ3 ஆகியன தனித்தனி பனிப்பாளர்களின் கீழ் இயங்கி வந்துள்ளன. 

அவற்றின் பணிப்பாளர்களும் சிறுபான்மை இனத்தை சார்ந்தவர்களாகவும் கானப்பட்டனர். இதனால் நாட்டின் புலனாய்வுத்துறயில் மாற்றம் கொண்டுவந்து இம்மூன்று பிரிவுகளும் கூட்டாக பெரும்பான்மை இனத்தைச்சார்ந்த ஒரே பணிப்பாளர் நாயகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதானதும், இலங்கை இராணுவம் ஜுன்டா இரானுவத்தை நோக்கி நகர்கின்றதா என என்னத்தோன்றுவதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எவ்வாரிருந்த போதும் இத்தகைய எண்ணங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இலங்கை அரசின் சிறுபானமையினர் தொடர்பான நிலைப்பாட்டில் வெளிப்படையாக கானமுடியவில்லை என கருதுகின்றேன். அத்தோடு இலங்கை இராணுவ கட்டமைப்பை பொருத்தவரையில் அத்தகைய முன்னேற்பாடு சாத்தியமற்றதாகும். 

ஏனெனில் இலங்கை அரசாங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிலும் கிரிஸ்த்தவ சமுக தலைவர்கள் தீர்மான சக்திகளாக கானப்படுகின்றனர். அதே போன்று இலங்கை இராணுவத்திலும் பெரு நிலை அதிகாரிகளாக கிரிஸ்த்தவ மதத்தை பின்பற்றுபவர்கள் கானப்படுகின்றனர். 

எனவே ஜுன்டா இராணுவ அமைப்பென்ற கருத்தாடல்கூட இலங்கை இராணுவத்தினுல் பிலவினை ஏற்படுத்த வாய்ப்பாக அமைந்துவிடும். பர்மாவில் பௌத்தமட்டும்தான் அரச மதம் என்று அறிவித்தல் விடுத்த போது கிரிஸ்தவர்களை பெரும்பான்மையாக கொண்ட கரேன் ரைபில் பிரிவினர் மியன்மார் இராணுவத்தை விட்டும் பிரிந்து சென்று போராட்டக்குழுக்கலுடன் இணைந்து இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டதினை வரலாற்றில் கானமுடியும்.
ரோஹிங்யா முஸ்லிம்கள் கொள்ளப்படும் போது சர்வதேசம் அசட்டையாக இருக்க மற்றொரு காரனம் மியன்மார் முஸ்லிம்கள் கரேன் இனத்தவருடனும் ஏனைய ஜனநாயக போராட்டக்குழுக்களுடனும் இணைந்து ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடுவதும், சில தீவிர சர்வதேச இஸ்லாமிய போராட்டக்குழுக்களுடன் தொடர்புகளை வைத்திருப்பதும் பிராந்தியத்தில் சிக்கள் நிலையினை தோற்றுவிக்கும் என கருதுவதனாலேயாகும். 

இலங்கை முஸ்லிம்களைப்பொருத்தவரை அவ்வாரான ஆயுதப்போராட்ட மனநிலை கொண்டவர்களாக இலங்கை வரலாற்றில் எப்போதும் இருந்ததில்லை.

மௌனம் களைக்கும் பெரும்பான்மை அரசியல் தலைமைகள்.
இலங்கையின் கட்சி முறை அரசியலானது முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புக்கு ஆலாகுவதனை கேள்விக்குள்ளாக்கும் என கருதிகின்றேன். குறிப்பாக மியன்மாரில் எத்ரிக்கட்சி அரசியல் பலயீனமானதாக கானப்படுவதுடன் இடதுசாரிகளும் வலுவிழந்தேகானப்படுகின்றனர். 

 விரும்பியோ விரும்பாமலோ பௌத்தர்களை அநுசரித்தாகவேண்டிய அரசியல் களநிலவரம் மியன்மாரில் தொரந்தும் கானப்படுகின்றது. இலங்கையைப்பொருத்தவரையில் இடது சாரிகளும் எதிர்க்கட்சி தலைமைகளும் டுiடிநசயட னுநஅழஉசயஉல (லிபரல் ஜனநாயகம்) பற்றிய ஓரளவு கருத்தொருமைப்பாட்டில் உள்ளனர். 

எனவே அரசாங்கமும் பெரும்பான்மை இனத்தவர்களைக்கொண்ட இத்தகைய அரசியட் தலைமகளுக்கு இடம்கொடுக்காத வரையில் தமது அரசியலை தக்க வைத்துக்கொள்ள சிறுபானமை தொடர்பில் வெளிப்படையாக ஓரளவு நல்லெண்ணெத்தை ஏற்படுத்துவதாக காட்டிக்கொள்ள வேண்டிய தேவைப்பாடும் உள்ளது. 

இலங்கை முஸ்லிம் அரசியல் கூறுபட்ட நிலையில் நமிக்கையீனத்தை ஏற்படுத்தி இருந்த போதும் சமூக அடித்தளத்தில் முஸ்லிம் கூட்டணி அரசியலுக்கான கள சாதகங்களும் இல்லாமல் இல்லை. இத்தகைய சூழ்நிலையில் முஸ்லிம் இனச்சுத்திகரிப்பு என்பது எவ்வகையில் சாத்தியம் என்பதும் கேள்விக்குறிதான். 

அத்தோடு இலங்கை முஸ்லிம்களின் பொருளாதார பிண்ணனிகளும் வரலாற்று வேரூன்றியதாக கானப்படுகின்றது. மியன்மார் முஸ்லிம்களைப்போலல்லாது மறைமுக நாட்டின் பொருளாதார ஆதிக்க சக்தியாகவும் விளங்குகின்றது. ஹலால்விடயம் தொடர்பிலான தேசிய சர்வதேசிய நிகழ்வுகள் இலங்கை அரசை அவசரமாக இது தொடர்பில் முடிவொன்றை எட்ட நிர்ப்பந்தித்ததை மறுக்க முடியாது. 

அதேபோன்று இலங்கையின் அந்நிய நாட்டு செலாவனியில் வெளிநாட்டு தொழிட்படையின் வருமானம் அதிகம் பங்கு வகிக்கின்றது. எனவே முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளும் எத்தகைய தூர நோக்கற்ற முரண் நடவடிக்கைகலும் மத்திய கிழக்கு சார் வருமானத்தில் அரசுக்கு பொருளாதார பிரச்சிணைகளுக்கும் வழிவகுக்கும் என குறிப்பிடப்படுகின்றது. 

இவ்வாரான முரண்பட்ட கள நிலவரங்களுக்குள் மதவாத சாயம்பூசிய மறைகர அரசியல் தற்போதய சூழ்நிலையில் முஸ்லிம்கள் மீதான இழப்புக்களை முற்றாக தடுத்து விடுமென்றோ, கருதிவிடவும் முடியாது. இன்றூ இனவாதம் பேசி உண்மைகளுக்கப்பாற்பட்ட விடயங்களை திணித்து சிங்கள சகோதர சமூகத்தை முஸ்லிம்களுக்கெதிராக மாற்றிவிடும் முயற்சி முஸ்லிம்கள் சிறுபான்மையல்லாத பிரதேசங்களில் சில இழப்புக்களையும் தற்காலிகமாக ஏற்படுத்திவிடும் என்பதனையும் மறுப்பதற்கில்லை. முஸ்லிம்கள் செரிந்து வாழும் பகுதிகள் தவிர்ந்த மிகச்சிரு குழுமங்களாக வாழும் பகுதிகளில் மியன்மாரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹலால் எதிர்ப்பு நடவடிகைகள், முஸ்லிம்களது வியாபரத்தளங்கள் புறக்கனிப்பு, பௌத்தர்களை அடையாளப்படுத்த மியன்மாரில் 969 இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது போன்று இங்கும் அடையாளங்களை பிரித்தரிய செய்வது, கலாச்சார அடக்கு முறை என்பன பாதிக்கும் என்பதில் கருத்து வேறுபாடுகள் இல்லை. ஆனால் மியன்மார் அரசியல் சிருபான்மை தொடர்பில் மூன்று பிரதான கொள்கைகளை மையப்படுத்தியே செயற்பட்டு வந்துள்ளது.

01. பூன்டோடு அழித்தல்
02. உறிஞ்ஞி ஆக்கிரமித்தல்
03. தன்வயமாக்கள்.

இக்கொள்கையில் இந்திய தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்து எஞ்ஞியவர்களை தமது பௌத்த கலாச்சாரத்துக்குள் தினித்துக்கொண்டதான வெற்றியினை இலங்கை முஸ்லிம்கள் விடயத்திலும் தீவிரவாத பௌத்த அமைப்புக்கள் முனைப்புக்காட்டுவது புறிகின்றது. முஸ்லிம்களின் முஸ்லிம் தனியார் சடம் அகற்றப்பட வேண்டும் என்ற கருத்தும், பொதுவான கலாச்சார ஒழுங்குக்குள் முஸ்லிம்கள் வரவேண்டும் என்பதுடன் தமது தனித்துவ அடையாளங்களை பின்பற்ற முடியாத சூழலை உருவாக்குவதில் இவ்வமைப்புக்கள் முனைப்புக்காட்டுகின்றன.

பர்மிய முஸ்லிம், தமிழ் மக்களிடம் கானப்பட்ட வந்தேரு குடிகள் என்ற மநோபாவமும் இனச்சுத்திகரிப்புக்கு காரனமாகியது. ஆனால் இலங்கை நிலவரம் முற்றிலும் மாருபட்டதேயாகும். எனவே சிறுபானமி மீதான இத்தகைய மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் நாட்டின் அமைதியை குழப்பி விடுவதுடன் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தையும் ஏற்படுத்துவதுடன் அமைதியான வழிமுறைகளை கொண்ட பௌத்த மதம் மீதும் பிழையான கண்ணோட்டத்தையும் தொற்றுவிக்கும்.

எனவே குறித்த தரப்புக்களுடன் ஆரோக்கியமான களந்துறையாடல்களை மேற்கொள்ளச்செய்வது முஸ்லிம் தரப்புக்கு தார்மீக பொருப்புக்கள் இருப்பது போன்று அரசுக்கும் கணிசமான பங்கு உள்ளதென்பதை கருதுகின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :