
அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்கு ஜாதிக ஹெல உறுமய ஒரு சட்டமூலத்தை அடுத்த இரண்டு வாரங்களில் கொண்டுவரவுள்ளது.
இந்த தீர்மானம் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் நேற்று மாலை எடுக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது மனசாட்சிக்கு அமைய வாக்களிக்க அனுமதிக்குமாறு கட்சித் தலைவர்களை கேட்டுகொள்ள வேண்டும் எனும் ஒரு தீர்மானத்தை மத்திய குழு எடுத்துள்ளது.
சட்டமூலத்தை சமர்பித்தவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட நாடாளுமன்றில் உள்ள சகல கட்சிகளையும் சந்தித்து இந்த சட்டமூலத்தின் நோக்கத்தை விளக்கவுள்ளதாக 3கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
0 comments :
Post a Comment