மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை பகுதியில் அழுகிய நிலையில் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை பகுதியில் நேற்று காணி துப்புரவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோர் காணியில் குழியொன்று உள்ளதைக்கண்டு அதனைத் தோண்டியபோது சடலம் புதைக்கப்பட்டுள்ளதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அப்பகுதிக்கு சென்ற பொலிஸார், சடலம் உள்ள பகுதியில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலத்தை தோண்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, கொக்கட்டிச்சோலை10ம் வட்டாரத்தில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையாக மாரிமுத்து இராஜேந்திரன் (45வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டதாகவும் குடும்ப பிரச்சினை காரணமாகவே இவர் தற்கொலை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலான விசாரணையை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

0 comments :
Post a Comment