முஸ்லிம் காங்கிரஸ் என்றாலே கொள்ளையடிப்பவர்கள்தான் என்கிறார் -முபாறக் மஜீட்


ல்முனை மாநகர சபையில் ஊழல் என்ற ஆளுந்தரப்பு குற்றச்சாட்டின் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினரால் கல்முனை மாநகரை கட்டி எழுப்ப முடியாது என்ற எமது வாதம் உறுதியாகியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது, கல்முனை கடந்த 1994 முதல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆட்சிலேயே உள்ளது. ஒரு காலத்தில் கிழக்கின் முக வெற்றிலையாக இருந்த கல்முனை இப்போது கிழக்கின் கழிசடையாக மாறியுள்ளது.

அது பிரதேச சபையாக இருந்த போது ஆரம்பித்த ஊழல், மோசடி, செயற்திறண் அற்ற உறுப்பினர்கள் என்பன மாநகர சபையாக மாறிய போதும் தொடர்ந்தது என்பதை எமது கட்சி மட்டுமே பகிரங்கமாக சுட்டிக்காட்டி வந்தது.

இது பற்றி கடந்த வருடம்; நாம் விடுத்த பத்திரிகை செய்தியில் கல்முனையின் அவல நிலைக்கு கல்முனை நகரில் உள்ள மாடுகளின் கழிப்பறையாக உள்ள பொது நூலகமே சாட்சி எனக்கூறினோம். இதனை இன்றைய மேயர் சிராஸ் ஏற்காமல் எமக்கெதிராக அறிக்கை விட்டார். தற்போது முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த உப்பினர்களே கல்முனை மாநகர ஊழல்கள் பற்றி பகிரங்கமாக பேசுவதற்கு காரணம் ஊழலில் பங்கு கிடைக்கவில்லை என்பதனால்த்தான் என்றே நாம் பார்க்கிறோம். தற்போதைய மாநகர சபையால் மக்கள் மீது பாரிய வரிகள் சுமத்தப்பட்டுள்ளன.

கல்முனை நகர மக்கள் பிசியான வியாபாரிகள் என்பதால் அவர்களால் இந்த வரிகள் பற்றி ஆராய்வதற்கு நேரமின்மை காரணமாக லஞ்சம் கொத்து சமாளிப்பதாக கூறப்படுகிறது. ஒரு வியாபார அனுமதி பத்திரம் பெறுவதற்கு கொழும்பில் கூட இல்லாத நடைமுறைகள் பின்பற்றப்பட்டு லஞ்சலுக்கு வழி வகுக்கப்படுகிறது. வியாபரா அனுமதி பத்திரம் பெற கிராம சேவையாளர் ஒப்பம், விளம்பர பலகை, சமுர்த்தி உத்தியோகத்தர் ஒப்பம் எனக்கேட்டு ஒரு வருடத்துக்கு மேல் இழுத்தடிக்கப்படுகிறது. இத்தகைய அனமதிப்பத்திரம் கொழும்பில் ஒரே நாளில் வழங்கப்படுகிறது.

இவ்வாறு மக்கள் மீது இரக்கமற்ற அரக்கர்களைக்கொண்ட அலிபாபா கோட்டையாக கல்முனை மாநகர சபை தொடர்ந்தும் இருப்பதற்கு பிரதான காரணம் மக்கள் இன்னமும் முஸ்லிம் காங்கிரசை நம்பி அதற்கு வாக்களிப்பதனாலாகும். ஒரு காலத்தில் அமைச்சராக இருந்த ஏ. ஆர் எம் மன்சூருக்குப்பின் பாரிய அபிவிருத்திகள் எதுவும் நடை பெறாமைக்கு இக்கட்சியினரின் சுயநலப்போக்கே காரணமாகும்.

இதன் மேயராக நிசாம் காரியப்பர் மட்டுமல்ல இக்கட்சியின் எந்த அப்பர் வந்தாலும் இதே சுயநலம் தொடரும் என்பது எமக்குத் தெரியும். கடந்த ஒரு வருடத்தக்கு மேல் பிரதி மேயராக இருக்கும் நிசாம் காரியப்பர் மாநகர சபை உறுப்பினராகத்தான் இருக்கிறாரா என்பது கூட மக்களுக்குத் தெரியாத நிலையில் அவரது சேவை உள்ளது. இந்த நிலையில் அவர் மேயராக வந்தாலும் மாநகர சபையின் ஊழலையோ, உறுப்பினர்களின் சுய நலன்களையோ ஒழிக்க முடியாது. கல்முனை மாநகர சபையில் இறைவனைப்பயந்த ஈமான், இஸ்லாம் அறிந்த ஒரு உறுப்பினராவது இருக்கின்றாரா?

எம்மை பொறுத்த வரை கல்முனை மாநகர சபையில் உறுப்பினர்களை மாற்றுவதில் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை. ஓட்டை வண்டியை வைத்துக்கொண்டு சாரதிகளை மாற்றுவதால் எந்த நன்மையும் கிடைக்காது. வண்டியை மாற்ற வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது தலை முதல் கால் நுணி வரை சுயநலம், மக்களை ஏமாற்றுதல், பொதுச்சொத்தை கொள்ளையடித்தல் என்பதில் ஊறிப்போயுள்ளார்கள்.

தாம் மக்களுக்கு எந்தச்சேவையும் செய்யாத போதும் மக்கள் இந்தக்கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்ற இறுமாப்பில் இவர்கள் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஒரே கட்சி ஆட்சி தொடர்ந்தும் கல்முனையில் இருப்பதால் பழையவர்களின் மோசடிகளும் வெளியே வருவதில்லை. கல்முனையின் ஆட்சியை சுய நலம் இல்லாத எமது கட்சியின் கைகளில் தந்தால் பாரிய பல மோசடிகளையும், ஊழல்களையும்; வெளிக்கொணர்வதோடு நல்லாட்சியை எம்மால் நடத்திக்காட்ட முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :